உதவி கரம் நீட்டுங்கள்

உதவி கரம் நீட்டுங்கள்
மும்பை ஜெரிமரி எல்லப்பா தெருவில் வசிக்கும் இன்பராஜ், புஷ்பா தம்பதியினர். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள புத்தன் தருவை கிராமத்தை சேர்ந்தவர்கள். மும்பையில் கூலித்தொழில் செய்து வருகின்றனர். இத்தம்பதியருக்கு கடந்த ஆண்டு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு யபேஷ் என பெயரிற்றனர். குழந்தை யபேசுக்கு பிறவியிலே தண்டுவடத்தில் சிறிய கழலை கட்டி இருந்தது. ஆரம்பத்தில் சிறிய அளவு இருந்த இக்கட்டி குழந்தை வளரவளர வளர்ந்துகொண்டே வந்தது. முதுகு தண்டுவடத்தில் கட்டி வளர்ந்ததால் குழந்தையின் இரண்டு கால்களின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாகவே இன்பராஜ் தம்பதியர் தங்களது குழந்தையை பரேலில் உள்ள வாடியா மருத்துவமனைக்கு அழைத்து சென்று காண்பித்தபோது அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஆறு மாதத்திற்கு பின்னர் அறுவைசிகிச்சை செய்யலாம் என அறிவுரை கூறியுள்ளனர். ஆறு மாதத்திற்கு பின்னர் தற்போது அதே மருத்துவரை சந்தித்தபோது அறுவைசிகிச்சை செய்து கட்டியை அகற்றினால் குழந்தையின் சிறுநீர் குழாய்க்கு பாதிப்பு ஏற்படும் என கூறியதை கேட்டு மனம் உடைந்து போனார்கள். இருப்பினும் தங்களின் குழந்தையை எப்படி ஏனும் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியோடு போராடினர். அப்போது அந்தேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் கட்டியை நீக்கி தருவதாக வாக்களித்துள்ளனர். அதற்கான செலவு ஒரு லட்சம் வரை ஆகும் என கூறியுள்ளனர். கூலி தொழிலாளியான இன்பராஜ் அவ்வளவு பணத்தினை எவ்வாறு ஏற்பாடு செய்வது என கலங்கிபோயிருக்கிருக்கிறார். தன் குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பல அமைப்புகள் மற்றும் தனி நபர்களிடம் உதவி கோரிவருகின்றனர்.
நீங்களும் இந்த குழந்தையின் வாழ்க்கையில் ஒளிவிளக்கேற்ற நினைத்தால் உலகில் எந்த மூலையில் இருந்தும் உங்களது உதவி கரத்தினை நீட்டலாம். நீங்கள் செய்யும் சிறிய உதவி இந்த குழந்தையின் எதிர்காலத்தினை மாற்றி யமைக்கும். உதவிகள் செய்ய விரும்புவோர் tpart2006@rediffmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 09892863830 என்ற அலைபேசியையோ தொடர்பு கொள்ளுங்கள்.
குறள் - பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்,
நன்மை கடலின் பெரிது.
குறள் விளக்கம் :-
[தனக்குப்] பயன் நோக்காமற் செய்த உதவியின் நற்பயனை நோக்கினால், அதன் நன்மை கடலினும் பெரியது.
நன்றியுடன்
உங்கள்

நாடார் மக்கள்.காம்
நாடார்
         திருநெல்வேலி, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் இவர்கள் பெரும்பான்மையினர். மேலும், மதுரை, தேனி,சேலம், கோவை, தஞ்சாவூர், ஆற்காடு, செங்கல்பட்டு, சென்னை போன்ற மாவட்டங்களிலும் இவர்கள் பல தொழில்களிலும் துறைகளிலும் ஈடுபட்டுள்ளனர். வட மாவட்டங்கள் மற்றும் புதுவையைப் பூர்விகமாகக் கொண்ட சான்றோர் சமுதாயத்தவர் கிராமணி என்ற பட்டம் கொள்வர். நாடார் சமுதாயத்தில் சுமார் 60% இந்துக்கள், எஞ்சியோர் கிறித்தவர்கள். ஆங்காங்கே ஒருசிலர் இஸ்லாம் சமயத்தைத் தழுவியதாகக் கூறப்படுகிறது. இந்து சமயத்தோடு பல விதங்களில் இணைந்திருந்தாலும் அதிலிருந்து சில கொள்கைகளில் மாறுபடுகின்ற அய்யாவழி சமயத்தைப் பின்பற்றுவோர் பெரும்பாலும் நாடார் சமூகத்தவரே.திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறித்துவ சமயத்தைப் பின்பற்றும் நாடார்கள் அதிகம் உள்ளனர்.
 வரலாறு
         நாடாள்வார் போன்ற பட்டங்களைக் கொண்ட சான்றோர் சமூகத்தினர் பூர்விகத் தென்னிந்திய அரச குலத்தவர் ஆவர். இதற்கு ஏராளமான கல்வெட்டு, செப்பேடு மற்றும் இலக்கியச் சான்றுகள் உண்டு. சால்பு என்ற பண்பின் அடிப்படையில் தோன்றிய சான்றோர், சான்றார் என்ற சொற்களே சாணார் என்ற வழக்குச் சொல்லின் மூல வடிவங்களாம்.
பெயர் மாற்றம்
          நாடான் (நாடார்) என்னும் சொல் நாடாள்வார் என்னும் பொருளுடைத்தது. ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கிலும், ஆங்கிலேயரின் பிற ஆவணங்களிலும் சான்றோர் சமுதாயத்தினர் சாணார் (Shanar/Chanar) என்று குறிக்கப்பட்டுள்ளனர். சாணார் என்ற வழக்கு இழிவாகக் கருதப்பட்டதால் நாடார் என்ற பட்டத்தையே சாதிப் பட்டமாகவும் சாதிப் பெயராகவும் இச்சாதியினரின் அனைத்துப் பிரிவினரும் பயன்படுத்தத் தொடங்கினர். சான்றோர் சாதியில் பின்வரும் ஐந்து உட்பிரிவுகள் உள்ளன: 1. நாடாள்வான், நாடான் என்ற பட்டங்களுக்குரிய நிலைமைக்காரர், 2. முக்கந்தர் அல்லது முக்கந்த நாடார், 3. சிறுகுடிச் சாணார் அல்லது நட்டாத்திகள், (4) பனையேறிச் சாணார், (5) மேனாட்டார், கள்ளச் சாணார், சேதிராயர், புழுக்கை ஆகிய பெயர்களைக் கொண்ட சேர்வைக்காரர்.  ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து (1910) இச்சமுதாயத்தின் கீழ்மட்டப் பிரிவினர் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறைக்கு மனுக் கொடுத்து, தங்கள் பெயரை நாடார் என மாற்றிக் கொண்டனர். ஆயினும், 2001இல் எடுக்கப்பட்ட தமிழ் நாட்டு மக்கள் தொகைப் பட்டியலில் எண் 74இன் கீழ் நாடார், சாணார், கிராமணி என்னும் மூன்று பெயர்கள் இணைத்தே காட்டப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் என உள்ளனர். மேலும், தமிழ் நாடு அரசு வெளியிட்ட பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் அவ்வாறே உள்ளது.
தொழில்கள்
          நாடார் சமூகத்தினருள் தென்மாவட்டங்களைச் சார்ந்தவர்களுக்கும் வடமாவட்டங்களைச் சார்ந்தவர்களுக்குமிடையே பழக்க வழக்கங்கள் மாறுபட்டுள்ளன. சிலர் விவசாயம், கட்டிடத்தொழில் செய்தனர். சிலருக்குச் சொந்த நிலம் இருந்தது. ஆனால் பலர் பனையேற்றுத் தொழில் செய்தனர். அவர்கள் பனை மரங்களிலிருந்து பதனீர், கள் இறக்குதல் மற்றும் அவைகளை விற்பனை செய்தல் போன்றவைகளுடன் பனை மரங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வந்தனர். இன்று நாடார் சமூகத்தினர் தமிழகத்திலும் அதற்கு வெளியிலும் அனைத்து வகையான பொருட்களையும் விற்பனை செய்யும் வணிகர்களாக உள்ளனர். சிலர் நிலக்கிழார்களாகவும் வேறு சிலர் தொழிலதிபர்களாகவும் உள்ளனர். பிற சாதியினரைப் போலவே நாடார்களும் கல்வித்துறை, தொழில்நுட்பத்துறை, மருத்துவத்துறை, தகவல்துறை போன்ற பல தொழில்களில் ஈடுபட்டு, சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.
சமுதாயத்தினர் அன்றைய நிலை
         தென்மாவட்டங்களில், குறிப்பாக முன்னளைய திருவிதாங்கூர் (Travancore) நாட்டின் பகுதியாக இருந்த இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் நாடாருக்கு எதிரான சாதிக் கொடுமை தீவிரமாக இருந்தது. அது தீண்டாமையின் உருவம்தான். உதாரணமாக, உயர்சாதியினரிடமிருந்து 36 அடிதூரம் விலகி நின்றுதான் அவர்கள் பேசவேண்டும்; அவர்கள் குடை எடுத்துச் செல்லக்கூடாது; செருப்புப் போடக் கூடாது; தங்க ஆபரணங்கள் அணியக்கூடாது; மாடி வைத்து வீடு கட்டக் கூடாது; பசுக்களை வளர்க்கலாம்; ஆனால் அதிலிருந்து பால் கறக்க அனுமதி இல்லை. அவர்களின் பெண்கள் தண்ணீர்க் குடங்களை இடுப்பில் வைத்துக் கொண்டு செல்லக்கூடாது. ஆண்களும் பெண்களும் இடுப்புக்கு மேலே மேலாடை அணிந்து கொள்ளக் கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, அரசாங்கத்திடமும் உயர்சாதியினரிடமும் சம்பளம் வாங்காமலே அவர்களுக்கு உழைக்க வேண்டும். அரசு அனுமதியோடு மேற்கூறிய கொடுமைகள் 1850கள் வரை தொடர்ந்தன.  இத்தகைய அடக்குமுறைகள் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் (அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் எல்லைப் பகுதிகளிலும் அதை ஒட்டியிருந்த பகுதிகளிலும்) இருந்து வந்தன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நாடார் சமுதாயத்தினரும், கேரளாவில் ஈழவர்கள் என்று அழைக்கப்படும் தமிழக இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயத்தினரும்தான். இந்தியக் குடிமக்கள் அனைவரும் சம நிலையினரே என சட்டத்தில் இருந்தாலும் நம் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் சமத்துவம் பிறக்கவில்லைதான். ஆனால் தீண்டாமைக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது.
சமுதாயத்தினர் போராட்ட வரலாறு
       இன்றைய கேரளா அன்று திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதியாக இருந்தது. அங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கும், நாடார் போன்ற சில சமூகத்தினருக்கும் உயர்சாதியினருக்கென்று ஒதுக்கப்பட்ட கோயில்களுக்குள் சென்று கடவுளை வணங்கும் உரிமை மறுக்கப்பட்டது. இந்த அடக்கு முறையைக் கண்டு மனம் வெறுத்த இச்சமூகத்தினர் சிலர் ஆதிக்க சாதிகளின் தாக்குதலுக்கு அஞ்சி கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். இதற்கும் இரு நூற்றாண்டுகளுக்கு முன்னரே நாடார் இன மக்கள் கிறித்தவ சமயத்தைத் தழுவியிருந்தார்கள். உதாரணமாக, 1680இல் திருநெல்வேலி மாவட்ட ஊராகிய வடக்கன்குளத்தில் கிறித்தவ நாடார் இருந்தனர். அவர்கள் கத்தோலிக்க கிறித்தவர்கள். 1685இல் அவர்களுக்கென்று ஒரு கோவில் கட்டப்பட்டது. 1701இல் அங்கு சுமார் 4000 கிறித்தவர் இருந்தனர். திருவிதாங்கூர் பகுதியில் நாடார் மக்கள் நடுவே புராட்டஸ்டாண்டு சபையினர் பணிசெய்தனர். 1780இல் பலர் கிறித்தவர் ஆயினர். ரிங்கல்டவுபே Ringeltaube என்னும் பெல்ஜிய நாட்டு போதகர் திருவிதாங்கூர் பகுதியில் அமைந்த மயிலாடி என்னும் ஊரில் நாடார் கிறித்தவப் பிள்ளைகளுக்கென்று முதல் பள்ளிக்கூடத்தை 1806இல் நிறுவினார். அதைத் தொடர்ந்து நாகர்கோவிலில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரி தொடங்கப்பட்டது. 1819இல் பெண்களுக்கான முதல் பள்ளிக்கூடத்தைக் கிறித்தவ போதகர்கள் நாகர்கோவிலில் தொடங்கினார்கள். நாடார் சமுதாய மக்கள் தீண்டாமையை எதிர்த்துப் போராடினர். ஒரு சமூகப் புரட்சியே வெடித்தது. நாடார் சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள் தங்கள் மார்பகத்தை மறைக்க மேலாடை அணியக் கூடாது என்ற கொடிய பழக்கம் நிலவிய காலம் அது. நாயர் போன்ற சூத்திர சாதியினருக்கும் கீழே, ஆனால் தீண்டத்தகாதவர்களுக்கு சிறிது மேலே என்னும் சமூக நிலை அது. தாங்கள் எவ்வாறு உடையணிய வேண்டும் என்று சட்டம் விதிக்க யாருக்கும் உரிமையில்லை என்றுகூறி, அநீதியான அச்சட்டத்தை மீறினார்கள் நாடார் சமுதாயப் பெண்கள். இதனால் எரிச்சலுக்கும் கோபத்திற்கும் ஆளான உயர் வகுப்பினர் சந்தைகளுக்கு வந்த நாடார் பெண்களின் ஆடையைக் கிழித்து எறிந்தார்கள். திருவிழாவிற்கு வந்த பெண்களின் மேலாடைகளை அறுத்து எறிந்தார்கள். இடுப்புக்கு மேல் ஆடையில்லாமல் மற்ற ஆண்கள் முன் தாங்கள் நிற்கும் நிலையைக் கண்டு நாடார் பெண்கள் கூனிக் குறுகிப் போனார்கள். எதிர்த்த நாடார் சமூகத்து ஆண்கள் சித்ரவதை மற்றும் கொலை போன்ற இன்னல்களுக்கு ஆளானார்கள். நெய்யாற்றின் கரை, இரணியல், பத்மனாபபுரம் என்று நாடார் சமூகம் வாழ்ந்த பல இடங்களில் கலகம் மூண்டது. சிலர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் திருவிதாங்கூரை ஆண்ட ராணி பார்வதிபாய் (1815-1829) "நாடார் பெண்கள் மேலாடை அணிவது அறிவுக்குப் பொருத்தமற்றதாதலின் இனி அவர்கள் எதிர்காலத்தில் தங்கள் உடலின் மேல் பாகத்தை மூடிக்கொள்ளக்கூடாது" என்று பிரகடனம் செய்தார். இப்பிரகடனம் நாடார் குலமக்கள் பலத்த கோபமடையச் செய்தது. இதனால் பல இடங்களில் புதிதாக கலகம் மூண்டது. அரசு ஆணையை எதிர்த்து நாடார் சமுதாயத்தினர் போராடத் தொடங்கினர். சுமார் 50 ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்த சமூக நீதிப் போராட்டம் 1859 ஆம் ஆண்டில் உச்சக்கட்டத்தை எட்டியது. நெய்யாற்றின் கரை, நெய்யூர், கோட்டாறு போன்ற இடங்களில் கடும் மோதல்கள் நிகழ்ந்தன. ஆனால் மக்கள் சக்திக்கு முன்னால் அரசு பணியவேண்டியதாயிற்று. சென்னை மாகாண கவர்னர் தலையிட்டதைத் தொடர்ந்து, திருவிதாங்கூர் மகாராஜா, நாடார் பெண்கள் மேலாடை அணியலாம் என்று 1859, ஜுலை மாதம் 26ஆம் நாள் பிரகடனம் செய்தார். ஆயினும் நாடார் பெண்கள் மேல்சாதிப் பெண்களைப்போல உடுத்தக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டது. சமத்துவம் கோரி எழுந்த மக்கள் எழுச்சி சமுதாய சீர்திருத்தத்திற்கு வித்திட்டது. பல நூற்றாண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் வீறுகொண்டு எழுந்து போராடினார்கள். வென்றார்கள். அதற்காக அவர்கள் கொடுத்த விலை எத்தனை உயிர்கள், எத்தனை இன்னல்கள், எவ்வளவு அவமானங்கள். அதனால்தான் இன்றைக்கு உலகளவில் பொருளாதாரத்திலும் சமூக அந்தஸ்திலும் மிக உயர்ந்த இடத்தை அவர்களால் பிடிக்க முடிந்தது.  இப்படி நாடார் சமூகத்தினரின் அடக்குமுறைகளை எதிர்த்த போராட்டமும் அதில் அவர்கள் வெற்றியடைந்து மீண்டு வந்ததும் இங்கு கவனிக்கத் தக்கது.
சமுதாயத்தினர் இன்றைய நிலை
         இன்று தமிழ்நாட்டில் பொருளாதார வசதியுடையவர்களாக இச்சமூகத்தினர் முன்னேற்றமடைந்துள்ளனர். பல துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். மேலும் இவர்கள் அரசியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமடைந்துள்ளனர். தமிழகத்தில் இச்சமூகத்தைச் சேர்ந்த காமராசர் முதலமைச்சராக இருந்திருக்கிறார். இச்சாதியினரில் பலர் தமிழக அமைச்சரவையிலும் இந்திய அமைச்சரவையிலும் அமைச்சர்களாகப் பணியாற்றியிருக்கின்றனர். தற்போதைய தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பூங்கோதை ஆலடி அருணா , சமூகநலத் துறை அமைச்சராக கீதாஜீவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
முக்கியப் பிரமுகர்கள்
           இந்த நாடார் சமுதாயத்தில் முக்கியப் போராட்டங்களின் மூலமும், அரசியல் பங்களிப்பின் மூலமும் சிறப்பு பெற்ற பலர் இருக்கின்றனர். அவர்களில் குறிப்பிடத்தக்கதாகச் சிலரைக் குறிப்பிடலாம்.
அய்யா வைகுண்டர் - நாடார் சமூகத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த முத்துக்குட்டி என்பவர். கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த தீண்டாமைக் கொடுமையை எதிர்த்துப் போராடியவர். அய்யா வழி எனும் புதிய வழிபாட்டு முறையைக் கண்டறிந்து வழிகாட்டியவர்.

மார்ஷல் நேசமணி - 1956 ஆம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தைக் கேரளாவோடு இணைக்க வேண்டும் என்ற நிலையில் போராடி அம்மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்கப் பாடுபட்டவர்.

காமராஜர் - ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துப் போராடிய பல விடுதலைப் போராட்ட வீரர்களில் தமிழ்நாட்டில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த காமராசரும் ஒருவர். இவர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்ததுடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து லால்பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி ஆகியோரை இந்திய அரசின் பிரதமராகக் கொண்டு வர முன் நின்றவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கே.டி.கோசல்ராம் - சுதந்திரப் போராட்ட தியாகியான இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு அணையை தன் சொந்த முயற்சியில் நாடார் சமூக மக்களிடமிருந்தும் வசூலித்து கட்ட வைத்த பெருமைக்குரியவர்.

பட்டிவீரன்பட்டி சௌந்தர பாண்டியன் - பொது இடங்களில் தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கும் மற்றவர்களுக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று போராடிய சிலருள் இவர் முக்கியமானவர். நாடார் சமூகத்திற்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று போராடி முதல் மேல்சபை உறுப்பினரானவர்.
கல்விப் பணி
            தமிழ்நாட்டில் நாடார் சமுதாயத்தினர் ஆற்றி வரும் கல்விப்பணி அரியது. கிறித்துவ மத சார்புடைய அமைப்புகளுக்கு அடுத்ததாக நாடார் சமூகத்தினர் அதிக அளவில் கல்விக்கூடங்களை உருவாக்கியுள்ளனர். இந்த க் கல்விக்கூடங்களின் வாயிலாக தமிழகத்தில் சிறப்பான கல்விப்பணியாற்றும் நாடார் சமுதாயத்தின் பங்களிப்பு பெரிதும் போற்றக் கூடியது.
அரசியல் பங்களிப்புகள்
             தமிழ்நாட்டில், தென் மாவட்டங்களில் அதிக அளவாக இச்சமுதாயத்தினர் அரசியலில் பங்களிப்பு செய்து வருகின்றனர். இச்சாதியினரில் பலர் தமிழக அரசின் சட்டமன்ற உறுப்பினர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் பங்களிப்பு செய்துள்ளனர். இவர்களில் சிலர் தமிழக அமைச்சரவையிலும் இந்திய அமைச்சரவையிலும் அமைச்சர்களாகப் பணியாற்றியிருக்கின்றனர்..
கிறித்துவ மதத்திற்கு மாறியவர்கள்
          1800ஆம் ஆண்டில் தஞ்சாவூர்ப் பிரதேசத்தைப் பூர்விகமாகக் கொண்ட புராசடஸ்டண்ட் கிறிஸ்தவ நாடார்கள் நெல்லை சீமையிலுள்ள திருச்செந்தூருக்கு அருகில் குதிரைமொழித்தேரியை அடுத்துள்ள வாழையடி வகுத்தான் குப்பம் என்ற ஊரில் மிஷனரிமார்களால் குடியேற்றப்பட்டனர். அந்தப் புதிய குடியேற்றத்துக்கு நாசரேத் என்ற பெயரையும் சூட்டினர். ஒப்பீட்டளவில் திருவிதாங்கூர் பகுதி போல சான்றோர் சமூகத்துக்கு எதிரான இயக்கங்கள் எவையும் நடைபெறாத தஞ்சாவூர்ப் பிரதேசத்தில் சான்றோர் சமூகத்தவர் புராடஸ்டண்ட் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியுள்ளனர்.
இசுலாம் மதத்திற்கு மாறியவர்
          "தமிழத்தில் வாழும் இந்துச் சமுதாய மக்களுடைய சாதிகளுள் 'நாடார்' என்பதொரு சாதியாகும். நாடார் சாதியினருக்கு 'பரம்பரை'த் தொழிலாக ஒரு காலத்தில் தென்னை-பனை மரங்களிலிருந்து கள் இறக்குவது 'ஒதுக்கப் பட்டிருந்தது'. பின்னர், தங்களுடைய நிலையை உணர்ந்தவர்களாகத் தங்கள் பரம்பரைத் தொழிலைக் கைவிட்ட நாடார்கள் பலர் சென்னை போன்ற நகரங்களுக்குச் சென்று கடைகளில் பணியாற்றியும் சொந்தமாகத் தொழில் செய்தும் பொருளாதார ரீதியில் ஓரளவு உயர்ந்தார்கள். எனினும், உயர்ந்த சாதியினர் என்று சொல்லிக் கொள்பவர்களால் ஒதுக்கப் பட்டவர்களாகக் கருதப் பட்ட நாடார் பெருமக்களுள், "சமூக ரீதியில் உயர்வு பெறுவது எப்படி?" என்று சிந்தித்தவர்கள் மிகச் சிலரே. அவ்வாறு சிந்தித்தவர்களுள் ஒருவர்தாம் சக்திவேல் நாடார். பல்லாண்டுகளுக்கு முன்னர் இஸ்லாத்தின்பால் ஈர்ப்பு ஏற்பட்டு, முஸ்லிமாக மாறி, சமூக ரீதியான உயர்வு பெற்ற சாதிக் என்ற முன்னாள் சக்திவேல் நாடார், பல்லவி என்றழைத்துப் பெயரிட்ட தம் மகளையும் பர்சானா என்று மாற்றினார். பர்சானா, ஐ ஏ எஸ் தேர்வில் இந்திய அளவில் 30ஆவது தரம் பெற்றதோடு தமிழகத்தின் பெண் ஐ.ஏ.எஸ்-களில் முதலிடமும் பெற்றிருக்கிறார்."

S.Annamalai (S. அண்ணாமலை)

  S.Annamalai  (S.அண்ணாமலை)
  பண்ருட்டி மாவட்டத்தில் புலவனுர் கிராமத்தை சார்ந்த எஸ்.அண்ணாமலை 1974-ம் ஆண்டு மும்பைக்கு வந்து சர்வீஸ் செய்து கொண்டிருந்தார். சிறுவயதிலிருந்தே காங்கிரஸ் கட்சியின் ஈடுபாடு இருந்ததால் மும்பையிலும் கட்சியுடன் தொடர்பு கொண்டிருந்தார்;. இதன் காரணமாக 1992-ம் ஆண்டில் ஜெரிமேரி பகுதியில் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது எதிர்த்து போட்டியிட்ட சிவசேனா வேட்பாளரை விட 316 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் எதிர்த்து போட்டியிட்டவர் இவர் வெற்றி பெற்றது செல்லாது என்று நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீதிமன்றம் மூலம் இவரது வெற்றி  நிரூபிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1997-ல் காங்கிரஸ் கட்சி பண உதவி செய்ய மறுத்ததால் தேர்தலில் போட்டியிட மறுத்து   விட்டார். மேலும் அந்த வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டதால் அவரும் ஒதுங்கினார். ஆனால் அப்பகுதி
பொதுமக்கள் அவருடைய மனைவி லலிதா அவர்களை சுயேட்சையாக போட்டியிட வைத்து அவரை அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தார்கள்.ஜெயித்த பிறகு கட்சிக்கு உட்பட்டு நடத்தி வந்தார்கள். அதேபோல் 2007-ம் ஆண்டு கவுன்சிலர் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1992-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை 20 ஆண்டு காலமாக தொடர்ந்து அப்பகுதியில் வெற்றி பெற்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.அதேபோல் 1982-ம் ஆண்டு முதல் 17 வருட காலமாக குர்லா முனிபல் தமிழ்ப்பள்ளி பெற்றோர்க்குழு தலைவர் பொறுப்பில் பணியாற்றினார். 1978-ம் ஆண்டு முதல் மட்டுங்கா தாலுகா காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் பதவி வகித்தார். 1982-ம் ஆண்டு செயலாளராகவும், அதன்பின் 5 வருடம் தலைவராகவும் பொறுப்பு எடுத்து பணியாற்றி உள்ளார். அதனைத்தொடர்ந்து வடகிழக்கு மும்பை பொதுச்செயலாளராகவும் இருந்து தற்சமயம் மும்பை காங்கிரஸ் செயலாளராகவும் மற்றும் தென்னிந்திய பிரிவு தலைவராகவும் பொறுப்பில் இருந்து வருகிறார். தாயகத்திலிருந்து மும்பைக்கு வந்து குறைந்த காலகட்டத்திலேயே அரசியலில் இத்தகைய பொறுப்புகளை ஏற்று நடத்தி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

           மத்திய ரயில்வேயில் இருந்து ஓய்வு பெற்ற இரயில் ஓட்டுநர். டி.அப்பாத்துரை மும்பை தமிழர்களின் இரயில் கோரிக்கைகளுக்காக அமைப்பு ஓன்று தொடங்கி போராடினால் தான் இதற்கு விடிவு காலம் பிறக்கும் என நம்பி அதற்காக முதன் முதலில் ஜெரிமெரி கவுன்சிலர் எஸ்.அண்ணாமலையை தொடர்பு கொண்டு மும்பை தமிழின இரயில் பயணிகள் நலச்சங்கம் என்ற அமைப்பை தொடங்குவது என தீர்மானித்தார். அதன்படி சங்கம் தொடங்கப்பட்டது. தலைவராக எஸ்.அண்ணாமலையும், செயலாளராக டி.அப்பாத்துரையும், பொருளாளராக கே.வி.சாரங்கபாணியும், மற்றும் மும்பையில் உள்ள  முக்கிய பிரமுகர்கள் சேர்க்கப் பட்டனர்.
   இந்த சங்கத்தைச் சேர்ந்த எஸ்.அண்ணாமலை மற்றும் டி.அப்பாதுரை, ஆகியோர் மும்பை தமிழர்களின் பல்வேறு இரயில் கோரிக்கைகளுக்காக புதுடெல்லி, சென்னை ஆகிய இடங்களுக்கு சென்று ரயில்வே உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்தும், தந்திகள் வாயிலாகவும், மனுகொடுத்தனர், அதோடு சி.எஸ்.டி.யில் உள்ள மத்திய உயர் அதிகாரிகளையும் சந்தித்து மனு கொடுத்தனர்.
    இதன் பலனாக கோடை விடுமுறை காலத்திற்காக 2011- ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ம் தேதியில் இருந்து குர்லாவிலிருந்து நெல்லைக்கு வாரம் ஒரு நாள் சனிக்கிழமை தோறும் ஒரு சிறப்பு ரயிலை இயக்க மத்திய ரயில்வே ஒப்புதல் வழங்கியது. இவ்வெற்றி எஸ்.அண்ணாமலை அவர்களது தலைமையிலான மும்பை தமிழின இரயில் பயணிகள் நல சங்கத்தினருக்கு புத்துணர்ச்சியை அளித்தது. இந்த முதல் வெற்றியை தொடர்ந்தார் போல் அடுத்ததாக தென்னக இரயிவே அதே ஆண்டு மே மாதம் 9-ம் தேதியிலிருந்து குர்லா விலிருந்து விழுப்புரத்திற்கு ஒரு கோடை சிறப்பு ரயில் விடுவதாக வாக்களித்தது. அதன்படி குர்லா விழுப்புரதிற்கு சென்னை வழியாக மற்றுமொரு சிறப்பு ரயில் விடப்பட்டது. மத்திய ரயில்வே பட்ஜெட்டிலும் கோடைக்கால சிறப்பு ரயில் அட்டவணையிலும் அறிவிக்கப் படாமல் இருந்து இரயில் விடப்பட்டது இதுவே முதல் முறையாகும். இன்னும் பல ரயில்கள்  மும்பையிலிருந்து தமிழகத்திற்கு விட எஸ்.அண்ணாமலை தலைமையிலான மும்பை தமிழின இரயில் பயணிகள் நலசங்கம் போராடி வருகிறது.
எஸ்ஸல் வேர்ல்ட் :
மும்பையின் புறநகர் கோராய் கடற்கரையில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு உல்லாச  பூங்காவாகும். இதன் மொத்த பரப்பளவு 64 ஏக்கர் மற்றும் இங்கு தினசரி சராசரி பத்தாயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் இன்ப சுற்றுலாவுக்காக வருகின்றனர். இங்கு உள்ள அனைத்து விளையாட்டுகளும் நீரை மையமாக கொண்டு அமைந்துள்ளதால் இதன் சீசன் கோடையில் ஆரம்பமாகிறது. எஸ்ஸல் வேர்ல்ட் மற்றும் வோட்டர் கிங்டம் என இரண்டு நீர் பூங்காக்கள் இங்கு அமைத்துள்ளன. கோடையில் குளுமையை வேண்டுவோர் சுற்றுலா செல்ல சிறந்த இடம் இது. மேலும் விவரங்களுக்கு :- www.essalworld.in
மும்பைதமிழன்.காமில் உங்களை வரவேற்கிறோம். இத்தளத்தில் விளம்பரம் செய்ய எங்களது மின்னஞ்சல் முகவரியை  தொடர்பு கொள்ளவும் tpart2006@rediffmail.com / mumbaitamilandotcom@gmail.com


இந்தியாவின் நுழைவாயில் என அழைக்கப்படும் இது மும்பையின் தெற்கு கடற்க்கரை ஓரமாக அமைந்துள்ளது. முன்னதாக அப்பலோ பந்தர்என அறிய பட்ட இது பிற்காலத்தில் கேட்வே ஒப் இந்தியா என மாற்றப்பட்டுள்ளது. 1920-1924 களில் கட்டப்பட்ட இந்த பிரம்மாண்ட நுழைவாயில் அப்போதைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவினுள் நுழைய வாயிலாக கருதப்பட்டதினால் இது கேட்வே ஒப் இந்தியா என பெயர்பெற்றது. முதன்முதலாக பிரிட்டிஷ் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் மற்றுhttp://www.blogger.com/post-create.g?blogID=5842854017753683578ம் மகராணி மேரி ஆகியோரை வரவேற்க்க உருவாக்கப்பட்ட இந்த கட்டிடம் முகலாய கட்டிடக்கலையை சார்ந்தது. தற்போது இவ்விடம் எலிபண்டா குகைக்கு  செல்லும் வாயிலாக அமைந்துள்ளது. இதன் அருகில் அழகிய பூங்காவும் தாஜ் ஹோட்டலும் அமைத்துள்ளது. இந்த பரம்மண்ட கட்டிடத்தின் உயரம் 85 mb ஆகும். பதினேழாம் நூற்றாண்டின் மராத்திய மாமன்னர்  சிவாஜியின் சிலை இன்னும் பிரமிக்க வைக்கிறது. இதன் நிஜ அழகை  இரவில் மின்னொளியில் ஜொலிக்கும் பொது காணலாம்.

Panguni Uthiram


பங்குனி உத்திரம்

குரு வீடான மீனராசியில் சூரி யனும், கன்யா ராசியில் சந்திரனும் சம மாகப் பார்த்துக் கொள்ளும் திருநாளே பங்குனி உத்திரம். ஸ்ரீசுப்பிரமணியர் வள்ளியையும், ஸ்ரீராமர், சீதையையும், உமாதேவி சிவபெருமானையும் திருமணம் செய்து கொண்ட திருநாள் இது. ஸ்ரீரங்கநாச்சியார், ஸ்ரீஐயப்பன் பிறந்த திருநாள். குடந்தை ஸ்ரீஆதி கும்பேஸ்வரர் மகாமகக்குளத்தில் தெப்பத்தில் வலம் வரும் வைபோக தினம் இதுவே. சென்னை, மயிலை ஸ்ரீகற்பகாம்பாள்ஸ்ரீகபாலீஸ்வரர் திருமணமும் ஆண்டு தோறும் இன்றுதான் நடக்கும். ஸ்ரீமகாலக்ஷ்மி இன்று விரதம் இருந்து திருமாலின் மார்பில் இடம் பெற்றாள். இதே விரதத்தால் இந்திரன் இந்திராணி யையும், ஸ்ரீபிரம்மா சரஸ்வதியையும் அடைந்தனர். ரதியின் பிரார்த்த னைக்கு செவி சாய்த்து மன்மதனை
மகேஸ்வரன் உயிர் பெறச் செய்த திரு நாள் இது. வடநாட்டில் இதை ஹோலி என்று வண்ணப்பொடிகளை வாரியி றைத்துக் கொண்டாடுகின்றனர்.

இத்தினத்தில் தான் வில்வீரன் அர்ஜுனன் பிறந்தான். காஞ்சி ஸ்ரீவரதர், மதுரை ஸ்ரீகூடலழகர், திருமோகூர், ஸ்ரீவில்லிப்புத்தூர்,அழகர் கோயிலில் திருக்கல்யாண வைபவத்தை இன்று தரிசிக்கலாம். காஞ்சி, திருவாரூர் போன்ற ஸ்தலங்களில் ருத்ரபாத தீர்த்தமும் பெறலாம். திருநாவலூர் ஸ்ரீதண்டபாணி ஸ்வாமிக்கு பக்தர்கள் 1008 காவடி எடுத்து வந்து சமர்ப்பிக்கிறார்கள்.

மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.

நாம் எவ்வாறு ஒரு சுப காரியத்தைச் செய்யும் போது நாள் நட்சத்திரம் பார்த்து செய்கிறோமோ அதுபோலத்தான் தெய்வங்களும் அவர்களது திருமணங்களை நல்ல நாட்களில் நடத்தி இருப்பர்.

அதன்படி, உத்திரத்திற்கு தெய்வங்களே சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு. அதாவது பார்வதி - பரமேஸ்வரன், தெய்வயானை- முருகன், ஆண்டாள் - ரங்க மன்னார், மீனாட்சி சுந்தரேஸ்வரர் என் பல தெய்வத் தம்பதிகளின் திருமணங்கள் இந்த பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில்தான் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

இதைவிடச் சிறப்பான மற்றொரு விஷயம், ராமாயணத்தில் வரும் தசரதச் சக்ரவர்த்தியின் நான்கு புதல்வர்களும் பங்குனி உத்திரத்தில்தான் தங்களது திருமண வாழ்க்கையில் நுழைந்துள்ளனர்.

தெய்வங்களின் திருமணம் மட்டுமல்லாது, பல தெய்வ அவதாரங்களும் இந்த பங்குனி உத்திரத்தில் நடந்துள்ளது.

வள்ளியின் அவதாரமும், ஸ்ரீ ஐயப்பனின் அவதாரமும், அர்ஜ்ஜுனன் தோன்றியதும் இந்த நந்நாளில்தான்.

தெய்வங்களெல்லாம் தேர்ந்தெடுத்து சிறப்பித்த இந்த பங்குனி உத்திர நட்சத்திரத்தன்று விரதம் இருப்பதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும் உகந்த நாள் என்று கருதப்படுகிறது.

இந்த நந்நாளில் கோயில்களில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் :

பழனியில் காவடி உற்சவம், மயிலாப்பூரில் அறுபத்து மூவர் உற்சவம், சுவாமி மலையிலும், திருச்செந்தூரிலும் வள்ளி கல்யாணம், காஞ்சிபுரத்தில் கல்யாண உற்சவம், மதுரையில் மீனாட்சி திருமணம் என அன்று பல முக்கியக் கோயில்களிலும் திருவிழாக்கள் களை கட்டும்.

இவ்வளவு சிறப்பு மிக்க இந்த பங்குனி உத்திரத்திற்கு இந்த ஆண்டு மேலும் ஒரு சிறப்பாக அந்த நாளில் புனித வெள்ளி, ஹோலி, மிலாது நபி என அனைத்து மனத பண்டிகைகளையும் கொண்டுள்ளது. அதோடு அல்லாமல் அன்று பெளர்ணமியும் உள்ளது.

இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திர நாளில் ஆலயம் சென்று வழிபடுவோம். பக்தர்கள், எளியோருக்கு அன்னதானம் செய்து அவர்களது ஆசியைப் பெறுவோம்.
மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.
நாம் எவ்வாறு ஒரு சுப காரியத்தைச் செய்யும் போது நாள் நட்சத்திரம் பார்த்து செய்கிறோமோ அதுபோலத்தான் தெய்வங்களும் அவர்களது திருமணங்களை நல்ல நாட்களில் நடத்தி இருப்பர். அதன்படி, உத்திரத்திற்கு தெய்வங்களே சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு.
அதாவது பார்வதி பரமேஸ்வரன், தெய்வயானை முருகன், ஆண்டாள் ரங்க மன்னார், மீனாட்சி சுந்தரேஸ்வரர் என பல தெய்வத் தம்பதிகளின் திருமணங்கள் இந்த பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில் தான் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இதைவிடச் சிறப்பான மற்றொரு விஷயம், ராமாயணத்தில் வரும் தசரதச் சக்கரவர்த்தியின் நான்கு புதல்வர்களும் பங்குனி உத்திரத்தில்தான் தங்களது திருமண வாழ்க்கையில் நுழைந்துள்ளனர்.
தெய்வங்களின் திருமணம் மட்டுமல்லாது, பல தெய்வ அவதாரங்களும் இந்த பங்குனி உத்திரத்தில் நடந்துள்ளது. வள்ளியின் அவதாரமும், ஸ்ரீ ஐயப்பனின் அவதாரமும், அர்ஜ்ஜுனன் தோன்றியதும் இந்த நந்நாளில்தான்.
தெய்வங்களெல்லாம் தேர்ந்தெடுத்து சிறப்பித்த இந்த பங்குனி உத்திர நட்சத்திரத்தன்று விரதம் இருப்பதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும் உகந்த நாள் என்று கருதப்படுகிறது.

பங்குனி உத்திரத் திருநாள்

இன்று பங்குனி உத்திரத் திருநாள். ஆன்மிக ஆர்வலர்களுக்கு இந்த நாளின் பெருமை மிக நன்றாகத் தெரியும். பலவிதங்களிலும் பெருமை வாய்ந்த திருநாள் இது.

கங்கையில் புனிதமான காவிரி நடுவில் உள்ள பூலோக வைகுண்டமாம் திருவரங்க நகரத்தில் பாம்பணையில் பள்ளி கொண்ட பெரிய பெருமாள் திருவரங்க நாதன் திருவரங்கநாயகித் தாயாருடன் சேர்த்தித் திருக்கோலத்தில் அமர்ந்து காட்சி தருவது இந்த உன்னதமான திருநாளில் தான். வருடத்தில் வேறு எந்த நாளிலும் இந்த திவ்விய தரிசனம் கிடைக்காது. அண்ணலும் அவளும் சேர்ந்து அமர்ந்திருக்கும் இந்தத் திருக்கோலத்தைத் தரிசிப்பவர் நினைப்பதெல்லாம் நடக்கும் என்பது காலம் காலமாய் வரும் நம்பிக்கை.



வைஷ்ணவ சம்ப்ரதாயத்தை நிலைநாட்டிய இளையபெருமாளாகிய இராமானுஜமுனி ஒரு முறை பங்குனி உத்திர மண்டபத்தில் இப்படி பெரிய பிராட்டியும் பெரிய பெருமாளும் சேர்ந்து காட்சி தரும் போது தான் கத்ய த்ரயம் (சரணாகதி கத்யம், வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம்) என்னும் மூன்று வடமொழி வசனகவிதைகளைப் பாடிச் சமர்ப்பித்தார். சரணாகதி கத்யத்தைச் சமர்ப்பித்த போது அரங்கன் அவருடைய சரணாகதியை ஏற்றுக் கொண்டு திருவாய் மலர்ந்தருளினான் என்றும் தாயார் அவரை உபய வீபூதிகளுக்கும் (கீழுலகம், மேலுலகம்) உடையவராய் நியமித்தார் என்றும் ஐதீகம். அன்றிலிருந்து இராமானுஜர் 'உடையவர்' என்ற திருநாமத்தாலும் அழைக்கப் படுகிறார்.

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்வனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே!

என் தலைவனை, என் தந்தை, அவர் தந்தை, அவர் தந்தை இப்படி என் முன்னோர் அனைவருக்கும் தலைவனை, குளிர்ந்த தாமரைக் கண்களை உடையவனை, பூங்கொம்பினை ஒத்த நுண் இடையாளான திருமகளைத் தன் மார்பில் உடையவனை, என் இறைவனைத் தொழாய் மட நெஞ்சமே!

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனை
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்!

என் மனமே! உன்னை நான் பெற்றதால் நன்றாகப் போனது. என்றும் இளையவனை, மலராளாகிய பெரியபிராட்டியின் மணவாளனை நான் தூங்கும் போதும் (என் உயிர் பிரியும் போதும்) நீ விடாது தொடர்ந்து போகிறாய். நன்று. நன்று. உன்னைப் பெற்று நான் என்ன தான் செய்ய முடியாது? இனி எனக்கு என்ன குறை?

நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார்கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே

என் நெஞ்சமே! நீயும் நானும் இப்படி கூட்டணி அமைத்து அவனை வணங்கி வந்தால், இவ்வுலகத்தில் நமக்குத் தாயும் தந்தையுமாய் இருக்கும் ஈசன் மணிவண்ணன் என் தந்தை வேறெந்த பிறவி நோயும் நமக்கு வரும்படி விடமாட்டான். சொன்னேன் கேட்டுக் கொள்.

எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே

வானவர்கள் எல்லாம் 'என் தந்தையே! என் தலைவனே' என்று தங்கள் சிந்தையில் வைத்து வணங்கும் செல்வனை (சம்பத் குமாரனை) இந்த உலகினில் பிறந்து எண்ணற்ற பாவங்களைச் செய்த நானும் 'எந்தையே' என்றும் 'எம்பெருமான்' என்றும் சொல்லி சிந்தையில் வைப்பேன். என்ன பேறு பெற்றேன்?

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண்பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே.

வழியில் போகும் ஒருவர் செல்வநாராயணன் என்று சொல்லவும் அதனைக் கேட்டு என் கண்களில் நீர் நிரம்பி வழியும். இது என்ன மாயம்? எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருந்த நான் எப்படி ஆகிவிட்டேன்? இரவும் பகலும் இடைவீடு இன்றி என்னை நம்பித் தன்னை எனக்குத் தந்து என்னை விடான் என் அழகிய மணவாள நம்பி.
(இவை மாறன் சடகோபனாகிய நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரங்கள்)
***

கோதை பிறந்த ஊராம் தென்புதுவை நகரில் (ஸ்ரீவில்லிபுத்தூரில்) பங்குனிப் பெருவிழாவின் உச்சகட்டமாக அமைவது பங்குனி உத்திரத் திருநாளில் சுவாமி ரெங்க மன்னார் ஆண்டாளின் திருக்கரங்களைப் பற்றும் திருக்கல்யாண மகோற்சவம். கோதை நாச்சியாரும் ரெங்க மன்னாரும் மகிழ்ந்திருக்கும் காட்சி இங்கே.

கோதை பிறந்த ஊர் கோவிந்த வாழும் ஊர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர் - நீதிசால்
நல்ல பக்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதும் ஊர்
வில்லிபுத்தூர் வேதக்கோனூர்
***
மதுரை வாழ் சௌராஷ்ட்ரப் பெருமக்களால் தங்கள் குலதெய்வமாகப் போற்றி வணங்கப் படும் தெற்கு கிருஷ்ணன் கோவில் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் பத்து நாட்கள் பங்குனி பிரம்மோற்சவம் கண்டு தீர்த்தவாரிக்காகக் குதிரை வாகனத்தில் ஏறி வைகை ஆற்றில் இறங்கும் புனித நன்னாளும் பங்குனி உத்திரத் திருநாளே.
***

துர்வாச முனிவர் வந்து கொண்டிருக்கிறார். கோபத்திற்குப் பெயர் போனவர். ஆனால் இன்றோ மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார் போல் இருக்கிறது. அவரது திருக்கரத்தில் ஒளிவீசும் ஒரு அழகிய மலர் மாலை இருக்கிறது. அதனை மிகவும் பெருமையுடனும் பக்தியுடனும் ஏந்திக் கொண்டு வருகிறார். அப்போது அந்த வழியாகத் தேவர்களின் தலைவனான இந்திரன் தன் ஐராவதம் என்னும் யானையில் ஏறிக் கொண்டு பவனி வருகிறான். தேவர்களின் தலைவனான தன்னைப் பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுவதைக் கேட்டுக் கேட்டு மிக்கப் பெருமிதம் அவன் முகத்தில் தெரிகிறது.
துர்வாச முனிவர் இந்திரனின் முன்னால் சென்று 'தேவேந்திரா. உன் புகழ் எல்லா உலகங்களிலும் நிறைந்து இருக்கிறது. இப்போது அன்னை மகாலக்ஷ்மியைத் தரிசித்துவிட்டு அவர் அன்போடு அளித்த இந்த மலர் மாலையுடன் வந்து கொண்டிருக்கிறேன். அன்னை கொடுத்த இந்த பிரசாதத்தை ஏற்றுக் கொள்ள தேவர்களின் தலைவனான உனக்குத் தான் உரிமை இருக்கிறது. இதோ வாங்கிக் கொள்' என்று சொன்னார்.

விண்ணோர் தலைவனும் அந்த மலர் மாலையை அலட்சியமாக அங்குசத்தால் வாங்கி ஐராவதத்தின் தலையில் வைத்தான். தேவர்களின் தலைவனான தான் கேவலம் இன்னொரு தெய்வம் கொடுத்த மலர்மாலையை பிரசாதம் என்று வணங்கி வாங்கி கொள்வதா என்ற எண்ணம். ஆனாலும் கொடுப்பவர் துர்வாசர் என்பதால் பேசாமல் வாங்கி கொண்டான். யானையோ தன் தலையில் வைக்கப்பட்ட மலர்மாலையை உடனே எடுத்துத் தன் கால்களின் கீழே போட்டு துவைத்துவிட்டது. அன்னையின் பிரசாதத்திற்கு ஏற்பட்ட அவமரியாதையைக் கண்டதும் வழக்கம் போல் துர்வாசருக்குக் கோபம் வந்து விட்டது.

'தேவேந்திரா. தேவர்களின் தலைவன், இத்தனைச் செல்வங்களின் தலைவன் என்ற மமதை, அகில உலகங்களுக்கும் அன்னையான மகாலக்ஷ்மியின் பிரசாதத்தையே அவமதிக்கும் அளவுக்கு உன்னிடம் இருக்கிறது. எந்த செல்வம் இருப்பதால் இந்த விதமாய் நீ நடந்து கொண்டாயோ அந்த செல்வங்கள் அனைத்தும் அழிந்து போகட்டும்' என்று சாபம் கொடுத்தார்.

துர்வாச முனிவரின் சாபத்தின் படி இந்திர லோகத்தில் இருந்த எல்லா செல்வங்களும் பாற்கடலில் வீழ்ந்துவிட்டன. அன்னை லக்ஷ்மியும் பாற்கடலில் மறைந்தாள். தேவர்கள் எல்லோரும் துன்பம் வரும்போது செய்யும் வழக்கம் போல் பாற்கடலில் பள்ளி கொண்டவனைப் போய் வணங்கினார்கள். இறைவனின் கட்டளைப்படி அசுரர்களின் உதவியோடு பாற்கடலைக் கடையத் துவங்கினார்கள்.

மந்தர மலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு அசுரர்கள் ஒரு பக்கமாகவும் தேவர்கள் ஒரு பக்கமாகவும் பாற்கடலைக் கடைந்து கொண்டிருக்கின்றனர். நாட்கள் பல சென்று விட்டன. அழிந்து போன செல்வங்கள் திரும்பி வருவதைப் போல் தெரியவில்லை. ஆனால் திடீரென்று வெப்பம் அதிகமாகிவிட்டது. பாற்கடலில் இருந்து ஆலமென்னும் விஷம் வெளிவருகிறது. அதே நேரத்தில் வாசுகிப் பாம்பும் உடல்வலி தாங்காமல் விஷத்தைக் கக்குகிறது. இரண்டு விஷமும் சேர்ந்து கொண்டு ஆலகாலமாகி எல்லா உலகையும் அழித்துவிடும் போல் இருக்கிறது.

உலகங்களின் துன்பத்தைக் கண்டு பொறுக்காத கருணாமூர்த்தியாகிய மகேசன் உடனே அந்த ஆலகாலத்தை கையினில் ஏந்தி விழுங்கிவிட்டார். காலகாலனாகிய அவரை எந்த விஷம் என்ன செய்ய முடியும்? ஆனாலும் அன்னை பார்வதியால் அதனைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. அண்ணல் உண்ட விஷம் கழுத்திலேயே தங்கிவிடும் படி அவரின் கழுத்தில் கையை வைத்தாள். விஷம் அங்கேயே நின்றது. விஷத்தின் வலிமையால் அண்ணலின் கழுத்து நீல நிறம் பெற்றது. அண்ணலும் 'நீலகண்டன்' என்ற திருப்பெயரைப் பெற்றார்.

இன்னும் சில நாட்கள் சென்றன. எல்லா செல்வங்களும் ஒவ்வொன்றாக பாற்கடலில் இருந்து வெளிவரத் தொடங்கின.
அன்னை மகாலக்ஷ்மியும் பாற்கடலில் இருந்து தோன்றினாள். அலைமகள் 
என்ற திருநாமத்தை அடைந்தாள். அப்படி அன்னை பாற்கடலில் இருந்து 
தோன்றிய பெருமை மிக்க திருநாள் பங்குனி உத்திரத் திருநாள். அன்னை 
பாற்கடலில் இருந்து தோன்றும் போதே கையில் ஒரு மலர்மாலையை 
ஏந்திக் கொண்டு தோன்றினாள். அதனை நேரே சென்று தன் கணவனாகிய 
திருமாலின் கழுத்தினில் இட்டாள். அதனால் பங்குனி உத்திரத் திருநாள் 
அன்னை மகாலக்ஷ்மியின் பிறந்த நாள் மட்டுமன்றி திருமண நாளாகவும் 
 கொண்டாடப் படுகிறது.

***

மஹிஷியின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. அவள் வாங்கிய வரத்தின்
படி சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த மகனால் தான் அழிவு. ஆனால் 
ஆணும் ஆணும் சேர்ந்து பிள்ளை எப்படி பிறக்கும்? அது நடக்காத 
விஷயமாதலால் அவள் தன்னை அழிக்க யாருமில்லை என்று எண்ணிக்  
கொண்டு அளவில்லாத அட்டூழியங்கள் செய்துக் கொண்டிருக்கிறாள்.

பாற்கடலில் தோன்றிய அமுதத்தை தேவர்களுக்குக் கொடுப்பதற்காக 
விஷ்ணு மோகினியாக அவதாரம் எடுத்த போது மஹிஷி பெற்ற வரம் 
வேலை செய்யத் தொடங்கியது. மோகினிதேவியும் சிவபெருமானும் 
இணைந்ததால் ஹரிஹரசுதனான ஐயன் ஐயப்பன் பிறந்தான். மோகினிசுதன 
பிறந்த தினம் பங்குனி உத்திரமாகிய திவ்வியத் திருநாள்.

***

சூரபதுமனும் அவன் தம்பியரும் செய்யும் தொல்லைகள் அளவிட 
முடியாமல் போய்விட்டன. சிவகுமாரனாலேயே தனக்கு அழிவு 
வரவேண்டும் என்று வரம் பெற்றதாலும் சிவபெருமான் காலகாலமாக 
அப்போது தவத்தில் மூழ்கி இருந்ததாலும் தனக்கு தற்போதைக்கு அழிவு 
இல்லை என்றெண்ணி அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறான் சூரன். 
அன்னை தாக்ஷாயிணி இமயமலைக்கரசன் மகளாய் பர்வத ராஜகுமாரியாய் 
பார்வதியாய் தோன்றி சிவபெருமானை மணக்க தவம் செய்து 
கொண்டிருக்கிறாள். சிவபெருமானோ அன்னை தாக்ஷாயிணியைப் 
பிரிந்ததால் மனம் வருந்தி யோகத்தில் நிலை நின்று விட்டார். சூரனின் 
அழிவு நேர வேண்டுமாயின் அன்னை பார்வதியை ஐயன் மணக்கவேண்டும்.
அதற்காக தேவர்களின் தூண்டுதலின் படி காமன் தன் கணைகளை ஐயன் 
 மேல் ஏவி அவரின் நெற்றிக் கண்ணால் சுடப்பட்டு அழிந்தான். ஆனால் 
காமன் கணைகள் தன் வேலையைச் செய்தன. காமேஸ்வரன் அன்னை 
பார்வதியை மணக்க சம்மதித்துவிட்டார். ரதிதேவியின் 
வேண்டுகோளுக்கிணங்க மன்மதனும் உயிர் பெற்று எழுந்து ஆனால் 
உருவம் இல்லாமல் அனங்கன் ஆனான். அன்னையும் அண்ணலும் 
 திருமணம் செய்து கொண்ட நன்னாள் பங்குனி உத்திரத் திருநாள். 
அதனால் இன்றும் பல சிவாலயங்களில் திருமண வைபவம் பங்குனி 
உத்திரத்தன்று நடைபெறுகிறது.

***
தைப்பூசம், கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் என்பன போல் 
பங்குனி உத்திரம் என்றாலே அது முருகன் கோவில் திருவிழா நாள் என்று 
தான் எல்லோருக்கும் உடனே தோன்றுவது. எங்கெல்லாம் முருகன் 
கோவில் கொண்டுள்ளானோ அங்கெல்லாம் பங்குனி உத்திரம் தவறாமல் 
கொண்டாடப்படுவதால் பங்குனி உத்திரம் என்றாலே குமரக்கடவுளின் 
நினைவு தான் நமக்கு வருகிறது. எனக்கும் அப்படித் தான். ஆனால் நாள் 
செல்லச் செல்ல நம் சமயத்தில் உள்ள மற்ற கடவுளர்களுக்கும் இந்த 
திருநாளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதற்கும் மேலாக பல  
பெருமைகள் இந்தத் திருநாளுக்கு இருக்கலாம். படிப்பவர்கள் நான் 
எதையாவது விட்டிருந்தால் தயைசெய்து சொல்லுங்கள்.


எந்த காரணத்தினால் பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்ததாகக் 
கொண்டாடப் படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எங்கள் 
குல தெய்வமான பழனியாண்டி அன்று தான் திருத்தேர் விழா 
கண்டருள்கிறான். முடிந்த வரை ஒவ்வொரு ஆண்டும் என் பெற்றோர் 
என் சிறு வயதில் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழாவிற்காக எங்களை 
(என்னையும் என் தம்பியையும்) பழனிக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். 
அதனால் பழனி தண்டாயுதபாணியின் மேல் எனக்குத் தனியொரு பாசம். 
இன்றும் ஒவ்வொரு முறை மதுரைக்குச் செல்லும் போது பழனிக்குச் 
செல்லத் தவறுவதில்லை. ஒவ்வொரு முறையும் அவனைப் பார்க்கும் 
போது கண் பனி சோரும்.

முருகன் குமரன் குகன் என்று மொழிந்(து)
உருகும் செயல் தன்(து) உணர்(வு) என்(று) அருள்வாய்
பொருபுங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே

கூகா என என் கிளை கூடியழப்
போகா வகை பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலுகவித்
தியாகா சுரலோக சிகாமணியே

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே



***

இப்போது இதுவரை சொன்னதைப் பற்றியத் தொகுப்புரை:

1. திருவரங்கத்தில் திருவரங்கநாதனும் திருவரங்கநாயகியும் சேர்த்திச் 
சேவை அருளும் நாள்
2. வில்லிபுத்தூரில் ஆண்டாள் நாச்சியாரும் ரெங்கமன்னாரும் 
மணக்கோலத்தில் காட்சி தரும் நாள்
3. மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் வைகை ஆற்றில் 
எழுந்தருளும் நாள்
4. ஜனக ராஜ குமாரி ஜானகி இராகவனை மணந்த நாள்
5. நாமக்கல் இலட்சும் நரசிம்மப் பெருமாளும் நாமகிரித் தாயாரும் 
தேரில் பவனி வரும் நாள்
6. அன்னை திருமகள் பாற்கடலில் இருந்து தோன்றிய நாள்
7. மோகினி சுதனான ஐயன் ஐயப்பன் தோன்றிய நாள்
8. பார்வதி பரமேஸ்வரனை மணந்த நாள்
9. முருகனின் திருவருளால் மதுரை மாநகரில் உங்கள் அன்பிற்கினிய 
அடியேன் பிறந்த நாள்
10. முருகன் அருள் முன்னிற்க அடியேனின் அன்புத் திருமகள் பிறந்த நாள்
11. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு இறைவன் செங்கற்களை பொன்கற்களாக 
மாற்றிக் கொடுத்த நாள்.

12. உலகிலேயே இங்கு தான், தொண்டருக்குத் திருவிழா காணும் நாள்
சென்னை-திருமயிலை அறுபத்து மூவர் (பங்குனி உத்திரத்தின் முன் நாள்)

13. தந்தைக்கு பிரணவ உபதேசம் நல்கி அருளிய நாள்; சுவாமி மலையில் 
பெரும் விழா.

14. வள்ளியம்மை அவதரித்த நாள்
15. வில்லுக்கு விஜயன் பிறந்த நாள்