உதவி கரம் நீட்டுங்கள்
மும்பை ஜெரிமரி எல்லப்பா தெருவில் வசிக்கும் இன்பராஜ், புஷ்பா தம்பதியினர். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள புத்தன் தருவை கிராமத்தை சேர்ந்தவர்கள். மும்பையில் கூலித்தொழில் செய்து வருகின்றனர். இத்தம்பதியருக்கு கடந்த ஆண்டு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு யபேஷ் என பெயரிற்றனர். குழந்தை யபேசுக்கு பிறவியிலே தண்டுவடத்தில் சிறிய கழலை கட்டி இருந்தது. ஆரம்பத்தில் சிறிய அளவு இருந்த இக்கட்டி குழந்தை வளரவளர வளர்ந்துகொண்டே வந்தது. முதுகு தண்டுவடத்தில் கட்டி வளர்ந்ததால் குழந்தையின் இரண்டு கால்களின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாகவே இன்பராஜ் தம்பதியர் தங்களது குழந்தையை பரேலில் உள்ள வாடியா மருத்துவமனைக்கு அழைத்து சென்று காண்பித்தபோது அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஆறு மாதத்திற்கு பின்னர் அறுவைசிகிச்சை செய்யலாம் என அறிவுரை கூறியுள்ளனர். ஆறு மாதத்திற்கு பின்னர் தற்போது அதே மருத்துவரை சந்தித்தபோது அறுவைசிகிச்சை செய்து கட்டியை அகற்றினால் குழந்தையின் சிறுநீர் குழாய்க்கு பாதிப்பு ஏற்படும் என கூறியதை கேட்டு மனம் உடைந்து போனார்கள். இருப்பினும் தங்களின் குழந்தையை எப்படி ஏனும் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியோடு போராடினர். அப்போது அந்தேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் கட்டியை நீக்கி தருவதாக வாக்களித்துள்ளனர். அதற்கான செலவு ஒரு லட்சம் வரை ஆகும் என கூறியுள்ளனர். கூலி தொழிலாளியான இன்பராஜ் அவ்வளவு பணத்தினை எவ்வாறு ஏற்பாடு செய்வது என கலங்கிபோயிருக்கிருக்கிறார். தன் குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பல அமைப்புகள் மற்றும் தனி நபர்களிடம் உதவி கோரிவருகின்றனர்.நீங்களும் இந்த குழந்தையின் வாழ்க்கையில் ஒளிவிளக்கேற்ற நினைத்தால் உலகில் எந்த மூலையில் இருந்தும் உங்களது உதவி கரத்தினை நீட்டலாம். நீங்கள் செய்யும் சிறிய உதவி இந்த குழந்தையின் எதிர்காலத்தினை மாற்றி யமைக்கும். உதவிகள் செய்ய விரும்புவோர் tpart2006@rediffmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 09892863830 என்ற அலைபேசியையோ தொடர்பு கொள்ளுங்கள்.
குறள் - பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்,
நன்மை கடலின் பெரிது.
குறள் விளக்கம் :-[தனக்குப்] பயன் நோக்காமற் செய்த உதவியின் நற்பயனை நோக்கினால், அதன் நன்மை கடலினும் பெரியது.
நன்றியுடன்
உங்கள்
நாடார் மக்கள்.காம்
No comments:
Post a Comment