S.Annamalai (S. அண்ணாமலை)

  S.Annamalai  (S.அண்ணாமலை)
  பண்ருட்டி மாவட்டத்தில் புலவனுர் கிராமத்தை சார்ந்த எஸ்.அண்ணாமலை 1974-ம் ஆண்டு மும்பைக்கு வந்து சர்வீஸ் செய்து கொண்டிருந்தார். சிறுவயதிலிருந்தே காங்கிரஸ் கட்சியின் ஈடுபாடு இருந்ததால் மும்பையிலும் கட்சியுடன் தொடர்பு கொண்டிருந்தார்;. இதன் காரணமாக 1992-ம் ஆண்டில் ஜெரிமேரி பகுதியில் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது எதிர்த்து போட்டியிட்ட சிவசேனா வேட்பாளரை விட 316 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் எதிர்த்து போட்டியிட்டவர் இவர் வெற்றி பெற்றது செல்லாது என்று நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீதிமன்றம் மூலம் இவரது வெற்றி  நிரூபிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1997-ல் காங்கிரஸ் கட்சி பண உதவி செய்ய மறுத்ததால் தேர்தலில் போட்டியிட மறுத்து   விட்டார். மேலும் அந்த வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டதால் அவரும் ஒதுங்கினார். ஆனால் அப்பகுதி
பொதுமக்கள் அவருடைய மனைவி லலிதா அவர்களை சுயேட்சையாக போட்டியிட வைத்து அவரை அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தார்கள்.ஜெயித்த பிறகு கட்சிக்கு உட்பட்டு நடத்தி வந்தார்கள். அதேபோல் 2007-ம் ஆண்டு கவுன்சிலர் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1992-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை 20 ஆண்டு காலமாக தொடர்ந்து அப்பகுதியில் வெற்றி பெற்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.அதேபோல் 1982-ம் ஆண்டு முதல் 17 வருட காலமாக குர்லா முனிபல் தமிழ்ப்பள்ளி பெற்றோர்க்குழு தலைவர் பொறுப்பில் பணியாற்றினார். 1978-ம் ஆண்டு முதல் மட்டுங்கா தாலுகா காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் பதவி வகித்தார். 1982-ம் ஆண்டு செயலாளராகவும், அதன்பின் 5 வருடம் தலைவராகவும் பொறுப்பு எடுத்து பணியாற்றி உள்ளார். அதனைத்தொடர்ந்து வடகிழக்கு மும்பை பொதுச்செயலாளராகவும் இருந்து தற்சமயம் மும்பை காங்கிரஸ் செயலாளராகவும் மற்றும் தென்னிந்திய பிரிவு தலைவராகவும் பொறுப்பில் இருந்து வருகிறார். தாயகத்திலிருந்து மும்பைக்கு வந்து குறைந்த காலகட்டத்திலேயே அரசியலில் இத்தகைய பொறுப்புகளை ஏற்று நடத்தி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

           மத்திய ரயில்வேயில் இருந்து ஓய்வு பெற்ற இரயில் ஓட்டுநர். டி.அப்பாத்துரை மும்பை தமிழர்களின் இரயில் கோரிக்கைகளுக்காக அமைப்பு ஓன்று தொடங்கி போராடினால் தான் இதற்கு விடிவு காலம் பிறக்கும் என நம்பி அதற்காக முதன் முதலில் ஜெரிமெரி கவுன்சிலர் எஸ்.அண்ணாமலையை தொடர்பு கொண்டு மும்பை தமிழின இரயில் பயணிகள் நலச்சங்கம் என்ற அமைப்பை தொடங்குவது என தீர்மானித்தார். அதன்படி சங்கம் தொடங்கப்பட்டது. தலைவராக எஸ்.அண்ணாமலையும், செயலாளராக டி.அப்பாத்துரையும், பொருளாளராக கே.வி.சாரங்கபாணியும், மற்றும் மும்பையில் உள்ள  முக்கிய பிரமுகர்கள் சேர்க்கப் பட்டனர்.
   இந்த சங்கத்தைச் சேர்ந்த எஸ்.அண்ணாமலை மற்றும் டி.அப்பாதுரை, ஆகியோர் மும்பை தமிழர்களின் பல்வேறு இரயில் கோரிக்கைகளுக்காக புதுடெல்லி, சென்னை ஆகிய இடங்களுக்கு சென்று ரயில்வே உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்தும், தந்திகள் வாயிலாகவும், மனுகொடுத்தனர், அதோடு சி.எஸ்.டி.யில் உள்ள மத்திய உயர் அதிகாரிகளையும் சந்தித்து மனு கொடுத்தனர்.
    இதன் பலனாக கோடை விடுமுறை காலத்திற்காக 2011- ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ம் தேதியில் இருந்து குர்லாவிலிருந்து நெல்லைக்கு வாரம் ஒரு நாள் சனிக்கிழமை தோறும் ஒரு சிறப்பு ரயிலை இயக்க மத்திய ரயில்வே ஒப்புதல் வழங்கியது. இவ்வெற்றி எஸ்.அண்ணாமலை அவர்களது தலைமையிலான மும்பை தமிழின இரயில் பயணிகள் நல சங்கத்தினருக்கு புத்துணர்ச்சியை அளித்தது. இந்த முதல் வெற்றியை தொடர்ந்தார் போல் அடுத்ததாக தென்னக இரயிவே அதே ஆண்டு மே மாதம் 9-ம் தேதியிலிருந்து குர்லா விலிருந்து விழுப்புரத்திற்கு ஒரு கோடை சிறப்பு ரயில் விடுவதாக வாக்களித்தது. அதன்படி குர்லா விழுப்புரதிற்கு சென்னை வழியாக மற்றுமொரு சிறப்பு ரயில் விடப்பட்டது. மத்திய ரயில்வே பட்ஜெட்டிலும் கோடைக்கால சிறப்பு ரயில் அட்டவணையிலும் அறிவிக்கப் படாமல் இருந்து இரயில் விடப்பட்டது இதுவே முதல் முறையாகும். இன்னும் பல ரயில்கள்  மும்பையிலிருந்து தமிழகத்திற்கு விட எஸ்.அண்ணாமலை தலைமையிலான மும்பை தமிழின இரயில் பயணிகள் நலசங்கம் போராடி வருகிறது.

No comments:

Post a Comment