இயற்க்கை வளம் செழித்திருக்கும் பொதிகை மலையின் உச்சியில் பிறந்து அது செல்லும் இடமெல்லாம் வளம் செழிக்க செய்யும் கௌதம ஆற்றின் அரவணைப்பில் உள்ள பல கிராமங்களில் ஒன்றான சிதம்பராபுரத்தில் ஒரு விவசாய குடும்பத்தின் தலைவர் ஆதிமுத்து - தலைவி மல்லிகா தம்பதியருக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் டாக்டர்.சுபாஷ் சந்திர போஸ். தன் ஊரில் உயர்நிலைக்கல்வி வரை பயின்ற அவர் தன் அக்காளின் உணவு விடுதியில் மேலாண்மைக்காக 1989 -ம் ஆண்டு மும்பைக்கு வந்தார். மும்பையின் குட்டி தமிழகமான தாராவில் இயங்கி வந்த அந்த உணவகத்தில் தன் பணிகளை செவ்வனே செய்தார். பணி நேரம் போக மீதமுள்ள நேரத்தினை பயனுள்ளதாக செலவிட எண்ணினார். அக்கால கட்டத்தில் மக்களின் மனதில் மலிந்து கிடந்த மூடநம்பிக்கைகளை அகற்றவேண்டும் என எண்ணி அது சார்ந்த துறையான ஜோதிடவியலை தேர்வுசெய்து மேற்படிப்புக்கு ஆயுத்தமானர். பகல் நேரத்தில் உணவு விடுதியில் பணி, இரவு நேரத்தில் படிப்பு என 1998 - 2000 வரை நாட்கள் உருண்டோடின. டோம்பிவிலியில் தனக்கே சொந்தமான உணவு விடுதி ஒன்றை ஆரம்பித்தார். இருப்பினும் தன் எண்ணிய எண்ணம் ஈடேறும் வரை ஓய்வதில்லை என தொடர்ந்து படித்து ஜோதிட விஷ்ரத், ஜோதிட ரத்னா , ஜோதிட வசஷ்பதி, ஜோதிட சுந்தர், ஜோதிட மகரிஷி உள்ளிட்ட பல பட்டங்களை பெற்றார். அருள்நிதி, பிரம்மஞானி போன்ற பட்டங்களை யோகா துறையில் பெற்றார். பொது மக்களிடத்தில் ஜோதிடத்தில் பரவி கிடந்த மூடநம்பிக்கைகளை மருத்துவரீதியாக தீர்வுகள் சொல்வது என தன் திறமைகளை வளர்த்துகொண்டார். இவரிடம் பலரும் வந்து பயனடைந்து சென்றனர். இவரது ஜோதிட திறமையை பாராட்டி ஜோதிடக்கலைக்கான செவாலியர் விருது -2011 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. மக்களுக்கு இலவச யோகா பயிற்சி அளிப்பது மற்றும் அறியாமையிலிருந்து விடுபட வழி செய்வது சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகியவற்றை தன் வாழ் நாள் இலட்சியமாக கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாது அமைதி இன்றி வாழும் மனிதனால் தன் உலக அமைதி கெடுகிறது. எனவே மனித மனதை அமைதியாக வைத்துக்கொண்டால் தான் உலகம் அமைதியாக இருக்கும். பயங்கரவாதம், கலவரம் குறையும் எனவே மக்கள் அனைவரும் தங்கள் மனதினை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் அமைதியாக வாழலாம். இது யோகா மூலம் மட்டுமே சாத்தியம் எனவேதான் மக்களுக்கு இலவச யோகா பயிற்சி அளிக்கிறேன். மேலும் அனைத்து மக்களும் யோகா செய்வதை வழக்கமாக கொண்டால் அவர்கள் மட்டுமின்றி இந்த உலகும் அமைதியாகவும் சந்தோசமாகவும் இருக்கும் என விருது கிடைத்த களிப்பிலிருந்து மீளாமல் நகைக்கிறார்.

school

                 மும்பை நகரில் வாக்கு உரிமை பெற்றவர்கள் 20 லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர். அது மட்டுமின்றி வருட வருடம் ஓட்டுரிமை பெற்ற தமிழர்களின் எண்ணிக்கை கூடி கொண்டே செல்கிறது என்று அரசியல் குறிப்புகள் சொல்கின்றன.
                அதே போன்று மாநகராட்சி பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை வருடத்திற்கு பத்து சதவிகிதத்திற்கும் அதிகமான மாணவர்கள் குறைந்து கொண்டே போகிறது. 1995 -ம் ஆண்டில் நடைபெற்ற கணக்கெடுப்பின் படி 25 ஆயிரம் மாணவர்கள் தமிழ்வழி கல்வி பயின்றுள்ளனர் சுமார் 550 க்கும் மேற்ப்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்தனர். இன்றைய நிலையில் 2011 - ல் 40 பள்ளிகளில் ஒரே ஒரு தலைமையாசிரியரின் கீழ் இரண்டு துணை தலைமையசிரியருடன் ஒன்பதயிரத்திக்கும் குறைவான மாணவர்கள் தான் தமிழ் வழிக்கல்வி பயில்கின்றனர்.   இதில் மட்டுங்கா, சீத்தாகேம்ப் , மலாடு ஆகியபகுதிகளில் உள்ள மூன்று பள்ளிகள் மட்டும் தான் உயர்நிலைக்கல்விவரை பயிற்றுவிக்கிறது. மீதமுள்ள 37 பள்ளிகளில் 31 பள்ளிகள் உயர் நிலை  ஆரம்ப பள்ளிகளும், 6 தாழ்நிலை ஆரம்பபள்ளிகளும் ஆகும். இதற்கிடையில் மாணவர்கள் இல்லாமல்  சில பள்ளிகள் மூடப்பட்டும்  உள்ளன  என்பது  குறிப்பிடதக்கது  .
           இது  போன்று  தனியார் பள்ளிகளில் சுமார் 5000 திற்கும் மேற்ப்பட்ட குழந்தைகள்  தமிழ்கல்வி  பயின்று  வருகின்றனர். அங்கேயும் மாணவர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைந்துகொண்டே போகிறது என்பது உண்மை.
        இந்த அளவிற்கு மும்பையில் தமிழ் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய கரணம் என்ன?  மேற்படிப்புக்கு பள்ளி வசதி இல்லாத காரணமா?  அல்லது தமிழில் எத்தனை வரை படித்தாலும் மும்பையில் வேலைவாய்ப்பு வசதி இல்லாத காரணமா? அல்லது வேற்று மொழியின் மீது உள்ள மோகமா?
எலிபண்டா குகைகள், மும்பை  கரைக்கு அப்பால், மும்பாய்த் துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள காராப்புரி (Gharapuri) தீவில் அமைந்துள்ளன. போத்துக்கீசர் இத்தீவுக்கு எலிபண்டாத் தீவு எனப் பெயரிட்டனர். 1987 ஆம் ஆண்டில் இக் குகைகள் யுனெஸ்கோ உலக பண்பாட்டுக் களம் என அறிவிக்கப்பட்டது. பல உள்நாட்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இங்குள்ள சிற்பங்களைத் துப்பக்கி சுடும் பயிற்சிக்கு இலக்காகப் போத்துக்கீசர் பயன்படுத்தியதனால் பல சிற்பங்கள் சிதைக்கப்பட்டு உள்ளன.

இக் குகைகள் 9 தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு உட்பட்ட சில்காரா அரசர்களில் காலப் பகுதியைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இவ்விடத்தைச் சேர்ந்த சில சிற்பங்கள் ராஷ்டிரகூடர் காலத்தைச் சேர்ந்தவையாகவும் கருதப்படுகின்றன. எலிபண்டாவின் திரிமூர்த்தி சிலை எனப்படும் சிவன் சிலையின் மூன்று முகங்கள் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. இது ராஷ்டிரகூடர்களின் அரச சின்னமும் ஆகும். நடராசர், சதாசிவன் ஆகியோரின் புடைப்புச் சிற்பங்களும், அர்த்தநாரீஸ்வரர் சிலைகளும் ராஷ்டிரகூடர் காலத்தைச் சேர்ந்த பிற கலைப் படைப்புக்களாகும்.

இக் குடைவரைக் கோயில் தொகுதி சுமார் 60,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்விடத்தில், அழகிய புடைப்புச் சிற்பங்களும், சிற்பங்களும், ஒரு சிவன் கோயிலும் உள்ளன. குகைகள் பாறையில் குடையப்பட்டுள்ளன. தீவு நகரின் தென் கிழக்கு கடற்கரையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்தீவிற்கு செல்ல கேட் வே ஆப்  இந்தியா - விலிருந்து படகு வசதி செய்யப்பட்டுள்ளது.

powai

வழிகாட்டி:-

இரயில் மார்க்கம் -

இந்த இடத்தின் மிக அருகில் எந்த இரயில் நிலையங்களும் கிடையாது. இரயில் பயணிகள் மத்திய இரயில்வேயில் காஞ்சூர் மார்க், விக்ரோலி, குர்லா ஆகிய இரயில் நிலையங்களையும், மேற்கு இரயில்வேயில் ஜோகேஸ்வரி, அந்தேரி, கோரேகான், ஆகிய இரயில்நிலையங்களை பயன்படுத்தலாம்.



சாலை வழியாக:-

cst

சத்ரபதி சிவாஜி தொடருந்து நிலையம்:-(Chhatrapati Shivaji Terminus)     
                          மிக பிரம்மாண்ட தோற்றத்துடன் காணப்படும் இது மத்திய தொடருந்து (Centrel Railway) தடத்தின் தலைமையகமாக செயல்படுகிறது. தற்போது சத்ரபதி சிவாஜி தொடருந்து நிலையம் (Chatrapati Shivaji Terminus – CST) என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும்  அதன் பழைய பெயரான் விக்டோரியா தொடருந்து நிலையம் (Victoria Terminus – VT) தான் இன்றும் பலரது வழங்கங்களில் உள்ளது. 1887 ம் ஆண்டு கட்டப் பட்ட இக்கட்டிடம் 1888 ல் மறு சீரமைக்கப் பட்டது. மும்பை மாநகரின் மிகப்பெரிய தொடருந்து நிலையமான இதிலிருந்து தினமும் 1000க்கும் மேற்பட்ட புறநகர் தொடர்வண்டிகள், வெளி மாவட்டத்திற்கான வண்டிகள் மற்றும் வெளிமாவட்டத்திற்கான வண்டிகள் இயங்குகின்றன. தினசரி இருபது லட்சத்திற்கும் மேலான பயணிகள் இந்த தொடருந்து நிலையத்தை பயன் படுத்துகின்றனர். புகழ் பெற்ற கௌத்திக் முறை தொழில் நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளது. இக்கட்ட த்தினை வடிவமைத்தவர் ப்ரேடேரிக் வில்லியம் ஸ்டிவன் (Frederick William Steven)  ஆவார். இக்கட்டிடத்தில் மும்பை புறநகர் மற்றும் துறைமுக இரயில் (Hourbar Lane) வழிதடத்தின் தலைமையகமாகவும் செயல்படுகிறது.