சத்ரபதி சிவாஜி தொடருந்து நிலையம்:-(Chhatrapati Shivaji Terminus)
மிக பிரம்மாண்ட தோற்றத்துடன் காணப்படும் இது மத்திய தொடருந்து (Centrel Railway) தடத்தின் தலைமையகமாக செயல்படுகிறது. தற்போது சத்ரபதி சிவாஜி தொடருந்து நிலையம் (Chatrapati Shivaji Terminus – CST) என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும் அதன் பழைய பெயரான் விக்டோரியா தொடருந்து நிலையம் (Victoria Terminus – VT) தான் இன்றும் பலரது வழங்கங்களில் உள்ளது. 1887 ம் ஆண்டு கட்டப் பட்ட இக்கட்டிடம் 1888 ல் மறு சீரமைக்கப் பட்டது. மும்பை மாநகரின் மிகப்பெரிய தொடருந்து நிலையமான இதிலிருந்து தினமும் 1000க்கும் மேற்பட்ட புறநகர் தொடர்வண்டிகள், வெளி மாவட்டத்திற்கான வண்டிகள் மற்றும் வெளிமாவட்டத்திற்கான வண்டிகள் இயங்குகின்றன. தினசரி இருபது லட்சத்திற்கும் மேலான பயணிகள் இந்த தொடருந்து நிலையத்தை பயன் படுத்துகின்றனர். புகழ் பெற்ற கௌத்திக் முறை தொழில் நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளது. இக்கட்ட த்தினை வடிவமைத்தவர் ப்ரேடேரிக் வில்லியம் ஸ்டிவன் (Frederick William Steven) ஆவார். இக்கட்டிடத்தில் மும்பை புறநகர் மற்றும் துறைமுக இரயில் (Hourbar Lane) வழிதடத்தின் தலைமையகமாகவும் செயல்படுகிறது.
No comments:
Post a Comment