Victoria Garden

ஜிஜா மாதா உயிரியல் பூங்கா :
       பைகுல்லா(Bycull) ரயில் நிலையத்தின் அருகில் அமைத்துள்ள 1861 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பிரம்மாண்டமான மணிகோபுரம் நம்மை வாயிலில் கம்பிரமாக வரவேற்கிறது. இயற்கையாக அமைத்த மரங்களும் செடிகளும் நம்மை உள்ளே அழைகின்றன. பரபரப்பான நகருக்கு நடுவே இயற்க்கை சூழலளில் அமைத்த இந்த பூங்கா சுமார் 48 ஏக்கர் நிலபரப்பில் அமைந்துள்ளது. ராணி பாக் (Rani Bagh) என அழைக்கப்பட்ட இவ்விடம் தற்போது மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜியின் தாயார் ஜிஜா மாதா போஸ்லே( Jijamatha Bosle) வின் பெயரால் ஜிஜா மாதா உயிரியல் பூங்கா என அழைக்க படுகிறது. அதிகமான விலங்குகள் மற்றும் பறவை களை இயற்க்கை சுழலில் இங்கு காண முடிகிறது. மாலை 4 மணிக்கு பிறகு இங்கு ஒட்டகம்,குதிரை,யானை சவாரியும் செய்யமுடியும். அதுமட்டுமல்லது இங்குள்ள சிறு ஏரியில் படகு சவாரியும் செய்ய முடியும். 
இந்த உயிரியல் பூங்காவினுள் பாவு தாஜி லட் (Bhau Daji Lad Museum) அருங்காட்சியகமும் அமைத்துள்ளது.  இதில் மிகப்பெரிய யானை சிலை கட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது. இந்த யானை சிலை ஏலேப்ஹண்டா( Elephanta Island) தீவில் கண்டெடுக்க பட்டது. இந்த யானை சிலை ஏலேப்ஹண்ட தீவில் கண்டெடுக்க பட்டதினால் தான் அத்தீவிற்கு ஏலேப்ஹண்ட தீவு (Elephanta Island) என பெயர் வைக்கப் பட்டது என்பது குறிப்பிடதக்கது. இந்த அருகாட்சியகம் முன்னதாக அல்பேட் அருங்காட்சியகம் (Albert Museum)என அழைக்கப்பட்டு வந்தது. இங்கு பிற பழைய நூல்களும் , இந்திய ஓவியங்களும் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்கா அமைந்துள்ள இடம் யூத வியாபாரி டேவிட் சசூன் (Devid Sasoon) என்பவருக்கு சொந்தமானது. மும்பை நகரின் நன்மைக்கு பயன்படும் விதமாக மும்பை மாநகராட்சிக்கு விக்டோரியா மற்றும் ஆல்பெர்ட் (Victoria and Albert Museum)அருங்காட்சியத்தை லண்டன் தொழில் நுட்பத்தில் வடிவமைத்து நன்கொடையாக அளித்தார். அவரது நினைவாக பொதுமக்கள் பயன்படுத்தும் மீன்பிடி தளத்துக்கு சசூன் கப்பல் துறை (sasoon dockyard) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. நீண்டகாலமாக இருக்கும் விக்டோரியா மணிகூண்டினையும்(victoria clock tower)  இவர்தான் கட்டினர்.

அருகிலுள்ள இரயில் நிலையம் பைகுல்லா

No comments:

Post a Comment