Haji Ali darga

அரபி கடலின் கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவில்  அமைந்துள்ள இந்த புனித தளம் இசுலாமிய மசூதியாகும். மகாலட்சுமி கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள இத்தளத்தில் அனைத்து மதத்தவரும் சென்று வழிபாடு செய்கின்றனர். புனிதர் சய்யத் பீர் ஹாஜி அலி ஷாஹ் பக்ஹாரி அவர்களின் பெயரால் இத்தலம் ஹாஜி அலி என அழைக்கபடுகிறது. இந்த திருத்தலம் 1431 ஆம் ஆண்டு இந்திய-இசுலாமிய கலைநுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளது. வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் இங்கு 40,000 திற்கும் மேலானோர் தொழுகை நடத்துகின்றனர். சாலையிலிருந்து தர்காவிற்க்கு செல்ல பாலம் ஒன்று அமைக்க பட்டுள்ளது. இந்த பாலத்தின் உதவியுடன் தர்காவை சென்றடையலாம். இப்பகுதியில் கடல் உள்வாங்கி வெளிவருவதை காணலாம். 

No comments:

Post a Comment