இனி....!
இறந்த காலம் கனவுதான்-அதில்
இருப்பதெல்லாம் நினைவுதான்
நிகழ்காலம் மட்டுமே நிச்சயம்
நிகழ்காலத்தை நிறுத்திப் பிடிப்பவன்
வருங்காலத்திற்கு வாழ்க்கைப் பட்டவன்
நண்பர்களே!
இந்த நிமிடம் நமக்குச் சொந்தம்
நாம் புறப்பட்டுவிட்டால்....
இனி புயல்கூட அஞ்சும்
சத்தியம் மட்டுமே
நம் கவிதைச் சரித்திரமானால்
இனி.....
அரபிக்கடல் கூட
நம் ஆனைக்கு கட்டுப்படும்...
ஆற்றல் பிரிந்திருக்கும் வரைதான்
நாம் மதராஸி..
இனி....
சேர்ந்து குரல் கொடுப்போம்
எழுத்துச் சிங்கங்களே
வாருங்கள்...வாருங்கள்...வாருங்கள்!
கவிஞர்களே!
நாம் இயற்க்கையைப் பாடினோம்
நம் வாழ்க்கை வறட்சி நிவாரணத்திற்கு
வாழ்க்கைப் பட்டது...
கவிஞர்களே!
நாம் காதலைப் பாடினோம்
நம் வாழ்க்கைத் தற்கொலையில்
முடிந்து போனது..
கவிஞர்களே!
இனி...இனியாவது
நாம் வாழ்க்கையைப் பாடுவோம்
வாருங்கள்...!
கம்பனைப் போல்..
இளங்கோவைப் போல்
காவியம் படைக்காவிட்டாலும்
பரவாயில்லை...
கவிதைப் படைத்திடுவோம்..
புதுகவிதைப் படைத்திடுவோம்..
வாழ்க்கை புதுகவிதைதான்- இனி
வருங்காலம் நம் கையில்தான்..!
நினைவுகளின் நீருற்று
அளவில்லா மனக்காயங்களுடன்-அதே
மெரினா கடற்கரை-சற்று
அழகுப் படுத்தப் பட்டிருக்கிறது!
திரும்பிப் பார்க்கிறேன் பல ஆண்டுகள்
உருண்டோடி விட்டன-அவளின்
நினைவுகள் எனக்குள் வருகின்றன!
அன்புடன் அழகுச் சேர்த்து கையோடு
கைகள் சேர்த்து இதயத்தை -எனக்கு
அந்த காதலி நினைவுக்கு வருகிறாள்!
"நீங்கள் என் கண்ணுக்குள்-காதல்
மழைப் பொழிகிறீர்கள்"
என்றாள் அவள்!
"நீ..என் இதயத்திற்குள்-காதல்
மழைப் பொழிகிறாய் "
என்றேன் நான்!
பதினொரு ஆண்டுகள் கட்டிக்காத்த-என்
இதய தாஜ்மகாலுக்குள்அவளை
குடிவைத்து காத்திருந்தேன்..
இன்று -அவளின்
பழயை நினைவுகள்புத்தாடை
உடுத்தி பூத்து வருகின்றன!
அன்று-
சுனாமியால் சுழன்றெழுந்த
காதலை- அவள்
இன்று மயான அமைதியாக்கிவிட்டாள்!
அந்த ஈரமான நினைவுகள்,
தூக்கத்திலும் -ஒரு
துக்கத்துடன் துடிதுடிக்க வைக்ககின்றன!
கண் மூடினாலும் அவள்
கனவாகத்தான் இருக்கிறது!
நினைவின் சாரல்கள்-நெஞ்சுக்குள்
அடிக்கின்றன!
ஓ...............அவளின் நினைவுகள்!
எனக்குள் வருகின்றன!
என் மனதுக்குள் -ஏன்
இந்த ஆரவாரம்!
என் இதயத்திற்குள்-ஏன்
இந்த மின்னல் இடி மழை!
தென்றல் தீண்டும் போது கூட
என் தேகம் சுடுவதேன்?
அவள் என்னை பிரிந்திருக்கலாம்ஆயினும்
என் நிழலோடு-அவள்
நினைவுகள் குடியிருக்கின்றன!
ஓ........அவளின் நினைவுகள்
எனக்குள் வருகின்றன..!
அவள் எனக்கு கொடுத்த நிஜ
ஒப்பந்தகளைவிட என் நிழலாய்-அவளின்
நினைவுகளின் ஒப்பந்தம்,
எனக்கு அதிகம் பிடிக்கிற்து!
காரணம்-
அவள் நிஜ ஒப்பந்களுடன்-வாழ்ந்த
ஆண்டுகளைவிட-என்
நிழலாய் அவளின் நினைவுகளுடன்
வாழ்ந்த ஆண்டுகள் அதிகம்!
அவைதான்-மீண்டும் எழுந்து
இன்று பாடுகின்றன பதிகம்!
ஒ.....அவளின் நினைவுகள்
எனக்குள் வருகின்றன!
சுமை
..............
தாய்க்கு குழந்தை சுமையானால்
பிறப்பது எப்படி..?
தந்தைக்கு குடும்பம் சுமையானால்
வாழ்வது எப்படி?
பறவைக்கு சிறகு சுமையானால்
வாழ்வது எப்படி?
இளைய தலைமுறையே உனக்கு
நீயே சுமையானால் நீ...
உயர்வது எப்படி?
வெற்றிப் பாதை .....................................
தங்கதுத் தூள்களுக்கு
சல்லடைப் போடும்
மனிதா உனக்குள்ளே...
தங்கச் சுரங்கம்-நீ
ஏன் உணரவில்லை?
உயரும் ஆற்றல்
உனக்குள்ளே....சமுத்திரம்
சிப்பிக்கள்,முத்துக்கள்-நீ
ஏன் உணரவில்லை?
மழையால் நிறையும்
வெய்யிலால் காயும்
வற்றிய குளமல்ல-நீ
ஏன் உணரவில்லை?
வாழ்க்கை என்கின்ற
பாயும் ஆற்றில்
நிற்கும் நாணல் -நீ
ஏன் உணரவில்லை?
அரளிப் பூக்களுக்கு
அலையும் நீயோ....
உன் தோட்டமெங்கும்
ரோஜாக்களின் அனிவகுப்பு.....-நீ
ஏன் உணரவில்லை?
கூடு கட்ட நார்களை
சேகரிக்கும் ஊர்குருவியல்ல..
உயர்ந்த இட்த்தில்
உட்காரும் ராஜாளி-நீ
ஏன் உணரவில்லை?
உன்னை நீ அறிந்தால்
ஏன் என்ற கேள்விக்கு.
இடமில்லை.....இதோ
வெற்றிப் பாதை...உன்னருகில்,..
உணர்...வெற்றி வெகுமதி....
உன் கைகளில்....
இறந்த காலம் கனவுதான்-அதில்
இருப்பதெல்லாம் நினைவுதான்
நிகழ்காலம் மட்டுமே நிச்சயம்
நிகழ்காலத்தை நிறுத்திப் பிடிப்பவன்
வருங்காலத்திற்கு வாழ்க்கைப் பட்டவன்
நண்பர்களே!
இந்த நிமிடம் நமக்குச் சொந்தம்
நாம் புறப்பட்டுவிட்டால்....
இனி புயல்கூட அஞ்சும்
சத்தியம் மட்டுமே
நம் கவிதைச் சரித்திரமானால்
இனி.....
அரபிக்கடல் கூட
நம் ஆனைக்கு கட்டுப்படும்...
ஆற்றல் பிரிந்திருக்கும் வரைதான்
நாம் மதராஸி..
இனி....
சேர்ந்து குரல் கொடுப்போம்
எழுத்துச் சிங்கங்களே
வாருங்கள்...வாருங்கள்...வாருங்கள்!
கவிஞர்களே!
நாம் இயற்க்கையைப் பாடினோம்
நம் வாழ்க்கை வறட்சி நிவாரணத்திற்கு
வாழ்க்கைப் பட்டது...
கவிஞர்களே!
நாம் காதலைப் பாடினோம்
நம் வாழ்க்கைத் தற்கொலையில்
முடிந்து போனது..
கவிஞர்களே!
இனி...இனியாவது
நாம் வாழ்க்கையைப் பாடுவோம்
வாருங்கள்...!
கம்பனைப் போல்..
இளங்கோவைப் போல்
காவியம் படைக்காவிட்டாலும்
பரவாயில்லை...
கவிதைப் படைத்திடுவோம்..
புதுகவிதைப் படைத்திடுவோம்..
வாழ்க்கை புதுகவிதைதான்- இனி
வருங்காலம் நம் கையில்தான்..!
நினைவுகளின் நீருற்று
அளவில்லா மனக்காயங்களுடன்-அதே
மெரினா கடற்கரை-சற்று
அழகுப் படுத்தப் பட்டிருக்கிறது!
திரும்பிப் பார்க்கிறேன் பல ஆண்டுகள்
உருண்டோடி விட்டன-அவளின்
நினைவுகள் எனக்குள் வருகின்றன!
அன்புடன் அழகுச் சேர்த்து கையோடு
கைகள் சேர்த்து இதயத்தை -எனக்கு
அந்த காதலி நினைவுக்கு வருகிறாள்!
"நீங்கள் என் கண்ணுக்குள்-காதல்
மழைப் பொழிகிறீர்கள்"
என்றாள் அவள்!
"நீ..என் இதயத்திற்குள்-காதல்
மழைப் பொழிகிறாய் "
என்றேன் நான்!
பதினொரு ஆண்டுகள் கட்டிக்காத்த-என்
இதய தாஜ்மகாலுக்குள்அவளை
குடிவைத்து காத்திருந்தேன்..
இன்று -அவளின்
பழயை நினைவுகள்புத்தாடை
உடுத்தி பூத்து வருகின்றன!
அன்று-
சுனாமியால் சுழன்றெழுந்த
காதலை- அவள்
இன்று மயான அமைதியாக்கிவிட்டாள்!
அந்த ஈரமான நினைவுகள்,
தூக்கத்திலும் -ஒரு
துக்கத்துடன் துடிதுடிக்க வைக்ககின்றன!
கண் மூடினாலும் அவள்
கனவாகத்தான் இருக்கிறது!
நினைவின் சாரல்கள்-நெஞ்சுக்குள்
அடிக்கின்றன!
ஓ...............அவளின் நினைவுகள்!
எனக்குள் வருகின்றன!
என் மனதுக்குள் -ஏன்
இந்த ஆரவாரம்!
என் இதயத்திற்குள்-ஏன்
இந்த மின்னல் இடி மழை!
தென்றல் தீண்டும் போது கூட
என் தேகம் சுடுவதேன்?
அவள் என்னை பிரிந்திருக்கலாம்ஆயினும்
என் நிழலோடு-அவள்
நினைவுகள் குடியிருக்கின்றன!
ஓ........அவளின் நினைவுகள்
எனக்குள் வருகின்றன..!
அவள் எனக்கு கொடுத்த நிஜ
ஒப்பந்தகளைவிட என் நிழலாய்-அவளின்
நினைவுகளின் ஒப்பந்தம்,
எனக்கு அதிகம் பிடிக்கிற்து!
காரணம்-
அவள் நிஜ ஒப்பந்களுடன்-வாழ்ந்த
ஆண்டுகளைவிட-என்
நிழலாய் அவளின் நினைவுகளுடன்
வாழ்ந்த ஆண்டுகள் அதிகம்!
அவைதான்-மீண்டும் எழுந்து
இன்று பாடுகின்றன பதிகம்!
ஒ.....அவளின் நினைவுகள்
எனக்குள் வருகின்றன!
சுமை
..............
தாய்க்கு குழந்தை சுமையானால்
பிறப்பது எப்படி..?
தந்தைக்கு குடும்பம் சுமையானால்
வாழ்வது எப்படி?
பறவைக்கு சிறகு சுமையானால்
வாழ்வது எப்படி?
இளைய தலைமுறையே உனக்கு
நீயே சுமையானால் நீ...
உயர்வது எப்படி?
வெற்றிப் பாதை .....................................
தங்கதுத் தூள்களுக்கு
சல்லடைப் போடும்
மனிதா உனக்குள்ளே...
தங்கச் சுரங்கம்-நீ
ஏன் உணரவில்லை?
உயரும் ஆற்றல்
உனக்குள்ளே....சமுத்திரம்
சிப்பிக்கள்,முத்துக்கள்-நீ
ஏன் உணரவில்லை?
மழையால் நிறையும்
வெய்யிலால் காயும்
வற்றிய குளமல்ல-நீ
ஏன் உணரவில்லை?
வாழ்க்கை என்கின்ற
பாயும் ஆற்றில்
நிற்கும் நாணல் -நீ
ஏன் உணரவில்லை?
அரளிப் பூக்களுக்கு
அலையும் நீயோ....
உன் தோட்டமெங்கும்
ரோஜாக்களின் அனிவகுப்பு.....-நீ
ஏன் உணரவில்லை?
கூடு கட்ட நார்களை
சேகரிக்கும் ஊர்குருவியல்ல..
உயர்ந்த இட்த்தில்
உட்காரும் ராஜாளி-நீ
ஏன் உணரவில்லை?
உன்னை நீ அறிந்தால்
ஏன் என்ற கேள்விக்கு.
இடமில்லை.....இதோ
வெற்றிப் பாதை...உன்னருகில்,..
உணர்...வெற்றி வெகுமதி....
உன் கைகளில்....
No comments:
Post a Comment