மிலாடி நபி
மக்களை சீர்திருத்திய மாமணி
23ம் வயதில் இவர் கதீஜா (ரலி) அம்மையாரை நபிகளார் திருமணம் செய்து கொண்டார்கள். 40ம் வயதில் இவர்களை தனது தூதராக அல்லாஹ் அறிவித்தான். நாயகம்(ஸல்) அவர்களுக்கு 11 மனைவிமார்கள் இருந்தனர். இவர்கள் மூலம் ஏழு குழந்தைகள் பிறந்தார்கள். ஆண் மக்கள் மூவரும் குழந்தையாக இருந்தபோதே இறந்துவிட்டனர். பெண்களில் நான்காவதாக பிறந்த பாத்திமா (ரலி) அம்மையார், இவருக்கு இரண்டு பேரன்மாரை பெற்றுத் தந்தார்கள். அவர்களுக்கு ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி) என பெயரிடப்பட்டது. பாத்திமா அம்மையார் அவர்கள் சுவர்க்கத்து பெண்களின் தலைவி என போற்றப்படுகிறார்கள்.நபிகள் நாயகம் அவர்கள், இறைவனால் தூதராக அறிவிக்கப் பட்டதும், நமது வணக்கத் திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே. நான் அவனுடைய தூதனாக இருக்கிறேன், என்று சொன் னார் கள். இதைக் கேட்ட மெக்காவாசிகள் அவரை கொடுமை செய்தனர். 53ம் வயது வரை அவர்கள் கடுமையான சோதனைகளை அனுபவித்தார்கள். இதன் காரணமாக மெக்காவிலிருந்து 450 கி.மீ. தூரத்திலுள்ள மெதீனாவுக்கு குடிபெயர வேண்டியதாயிற்று. மெதீனாவில் தான் நாயகம் அவர்களை ஆதரித்த மக்களின் எண்ணிக்கை பெருகியது. இதன்பிறகு பல யுத்தங்கள் செய்து மெக்கா நகர மக்களையும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளச் செய்தார்கள் நாயகம் அவர்கள். நபிகள் நாயகம் மிகுந்த பணிவுடையவர்கள். பிறரது துன்பத்தை நீக்குவதில் இவர்களுக்கு இணை யாருமில்லை. அவர்கள் இவ்வுலகில் தங்களது 63ம் வயதுவரை வாழ்ந்தார்கள். கி.பி.632, ரபியுல் அவ்வல் மாதம் 12ம் தேதியில் இவ்வுலகைத் துறந்தார்கள். அவர்கள் பிறந்ததும் மறைந்ததும் ஒரே நாளில்தான். இந்த நாளையே மிலாடி நபி என்னும் பெயரில் கொண்டாடுகிறார்கள்.
No comments:
Post a Comment