Crawford Marked

மகாத்மா ஜோதிபாய் புலே சந்தை (Mahatma Jyotiba Phule Mandai) என அழைக்கபடும் இது மும்பையில் உள்ள பெரிய மற்றும் நிரந்தர சந்தைகளில் ஒன்றாகும். இது தென் மும்பையில் சி.எஸ்.டி.ரயில் நிலையத்தின் வடக்கே , தலைமை காவல் நிலையத்தின் (Police headquarters) எதிர்புறம் அமைந்துள்ளது. முன்னதாக அப்போதைய மாநகர ஆணையர் ஆர்தர் க்ரவ்போர்ட் (Arthur Crawford) பெயரால் க்ரவ்போர்ட் சந்தை என அழைக்கப்பட்டு வந்தது.
மகாத்மா புலே ஸ்மாரக் சமிதியின் (Mahatma Phule Smarak Samiti) தலைவர் முகுன்றாவ்ஜி புஜ்பல் (Mukundraoji Bhujbal Patil) பாட்டீலின் ஒரு நீண்ட போராட்டத்திற்கு பிறகு மகாத்மா ஜோதிபாய் புலே சந்தை என மாநகராட்சியால் பெயர் மற்றம் செய்யப்பட்டிருந்தாலும் இன்னமும் இது அதன் பழைய பெயராலே அழைக்கப்பட்டு வருகிறது. 1869 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இக்கட்டிடம்  கோவாச்ஜி ஜெஹங்கிர் என்பவரால் நகரத்திற்கு அர்பணிக்க
 பட்டது. அன்றுமுதல்  விவசாயிகளில் மொத்த வியாபார சந்தையாக விளங்கியது. பின்னர் 1966 ஆம் ஆண்டு வாஷி, நவிமும்பையில்(APMC) உள்ள சந்தைக்கு மாற்ற பட்டது. நோர்மன் மற்றும் ப்ளெமிஷ் கட்டிட கலை நுட்பத்தில் இந்த கட்டிடத்தினை வடிவமைத்தவர் புகழ்பெற்ற நாவலாசிரியர் ருட்யார்ட் கிப்ளிங் (Rudyard Kipling ) இன் மகன் லோக்வூட் கிப்ளிங் (Lockwood Kipling) ஆவர். இந்த சந்தையில் காய்கறி, பழங்கள், வீட்டு உபயோகபொருட்கள்
, கலைநுட்ப பொருள்கள், எனத்துவங்கி இங்கு அனைத்து பொருட்களும் கிடைக்கும்.  இதன் மொத்த பரப்பு சுமார் 648 ௦௦௦ சதுர அடியாகும் மிக பிரம்மாண்ட கட்டிடத்தில் கலைநுட்பத்தினை ரசித்து கொண்டே பொருட்களை வாங்கலாம்.

No comments:

Post a Comment