நேரு கோளரங்கம் :
பாரத பிரதமர் பண்டித் ஜவகர்லால் நேரு பெயரால் அறியப்படும் இந்த கட்டிடம் ஒரு கோளரங்கமாகும். டாக்டர்.அன்னிபெசன்ட் ரோடு, ஒர்லியில் அமைந்துள்ள இக்கட்டிடத்தினை 1976 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 தேதி முன்னாள் பாரத பிரதமரும், ஜவகர்லால் நேரு வின் மகளுமான இந்திரா காந்தி அவர்களால் நிறுவ பட்டது.
மக்கள் விஞ்ஞானத்தையும் கோள் ஆராய்ச்சியை பற்றி அறிந்துகொள்ளும் நோக்குடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் வித்தியாசமான அமைப்புடன் 5000 சதுர அடி பரப்பளவில் மூன்று மாடி கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது. கட்டிடம் முழுவதும் குளிர் சாதனா வசதி செய்யப்பட்டுள்ளது. புதிய தொழில் நுட்பத்துடன் ஒலி, ஒளி அமைப்புடம் வானியலை திரையில் காண சுழலும் திரையரங்கம் இதனுள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 600 பேர் அமர்ந்து வானியலை திரையில் காணலாம். பூமியிலிருந்து அதன் மிக அருகில் உள்ள கோளின் நேற்று,இன்று,நாளைய நிலைகளை காணமுடியும். மிகப்பெரிய தொலைநோக்கி மூலம் வானத்தை பார்க்க முடியும்.
http://www.zumodrive.com/share/bqz0N2FhNT
மேற்கு இரயிவேயின் தாதர் மற்றும் மகாலட்சுமி இரயில் நிலையங்களில் இருந்து மிக அருகில் உள்ளது.
http://www.zumodrive.com/share/bqz0N2FhNT
மேற்கு இரயிவேயின் தாதர் மற்றும் மகாலட்சுமி இரயில் நிலையங்களில் இருந்து மிக அருகில் உள்ளது.
No comments:
Post a Comment