election 2012

 லலிதா அண்ணாமலை
                     மும்பை ஜெரிமரி பகுதியில் கடந்த 20  வருடங்களாக எஸ்.அண்ணாமலை குடும்பத்தினர் கவுன்சிலர் பதவி வகித்து வருகின்றனர். 1992 - ம் ஆண்டு எஸ்.அண்ணாமலை காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேர்தலில் வெற்றிபெற்றார். 1997 - ம் ஆண்டு அந்த 155 - வது வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டதால் அவரும் ஒதுங்கினர். இவரது பதவி சேவையை அறிந்த மக்கள் இவரது துணைவியார் லலிதா அண்ணாமலையை கட்டயபடுதி சுயேட்சையாக போட்டியிடவைத்து அமோக வெற்றி பெற செய்தனர். அதைப்போல அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு பிறகு அதேபோல பெண்கள் வார்டாக இருந்ததால் 2002 - ம் ஆண்டும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக தேர்ந்துடுக்கப்பட்ட லலிதா அண்ணாமலை வெற்றி பெற்றார். 2007  - ம் ஆண்டு பொதுவான வார்டாக மாறியதில் எஸ்.அண்ணாமலை திரும்பவும் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றியும் பெற்றார். 2012 - ம் ஆண்டின் மாநகராட்சி தேர்தலில் 155 -வது வார்டு  மீண்டும் பெண்களுக்கான வார்டாக ஒதுக்க பட்டதால் அந்த வார்டை தன் துணைவியாருக்கு தரும்படி கட்சி மேலிடத்திற்கு கட்சி மேலிடத்தில் விண்ணப்பித்தார். ஆனால் கட்சி சிலரின் தூண்டுதலால் மறுத்துவிட்ட காரணத்தினால் திருமதி. லலிதா அண்ணாமலை சுயேட்சையாக போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட  காங்கிரஸ் கட்சி வேட்பாளரை புறம்தள்ளி 5787  வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றி பெற்றார். பாரத தேசத்தின் பழமையான கட்சியான காங்கிரஸ்  கட்சியை தனிஒரு நபர் அவரது செயலாற்றலால் வியக்க வைத்து கட்சியின் கவனத்தை தன்மீது திருப்பிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தமிழ் குடும்பத்தார்க்கு மும்பையில் வாழும் 20  லட்சம் தமிழர்களும் ஓன்று சேர்ந்து பாராட்டுவது தமிழர்களின் கடமையாகும். இச்சாதனை தமிழர்களுக்கு  மும்பை தமிழனின் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்.
-------------------------------------------------------------------------------------------------------

இரா.தமிழ்செல்வம்
இரா.தமிழ்செல்வம் என்பது இவரது பெயர். சிறந்த சமூகசேவகர் என்பது  இவர்  மும்பையில் பெற்ற பெயர். பொதுவாக எந்த ஒரு பதவியிலும் இல்லாத போதிலும் அவரிடம் போய் நின்று ஒருவர் தனது பிரச்சனையை சொன்னால் உடனே அந்த பிரச்சனையை தனது பிரச்சனைத்யாக எடுத்துக்கொண்டு அதில் வெற்றி காண்பது இவரது வழக்கம். அந்த வகையில் இனம், மொழி, சாதி, மதம், வேறுபாடின்றிய இவரது செயல்பாடுகளை மக்கள் நன்கு அறிந்தவர்கள்.
        மும்பை முழுவதிலும் எந்த தமிழர்கள் எந்த விழாக்களுக்கு அழைப்பிதல் கொடுத்தாலும் அதில் தவறாமல் கலந்து கொள்வது இவரது பழக்கம் என்றாலும் எல்லோரிடமும் சகோதரத்துவத்துடன் பழகுவர் என்று சொல்லிக்கொள்ள யாரும் தயங்குவதில்லை.
       இவர் இதுவரை பாரதிய ஜனதா கட்சியில் பல ஆண்டுகளாக ஒரு சில முக்கிய பொறுப்புகள் வகித்துவந்தார். 2012 -ம் ஆண்டு மும்பை மாநகராட்சி தேர்தலில் கட்சி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு வார்டு எண் 168 ல் போட்டியிட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட வேட்பாளர்களை விட 1866  வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதன் மூலம் அப்பகுதியில் 40  ஆண்டுகளாக கவுன்சிலர் பதவிவகிதவரை முறியடித பெருமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதை நிருபிக்கும் இவர் போன்றோருக்கு மும்பை தமிழன் தலை வணங்குகிறது. மேலும் தமிழினத்திற்கு பெருமைசேர்த்த இவருக்கு மும்பைதமிழனின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
...............................................................................................................

 ஆர்.எஸ். குமார்.
ஆர்.எஸ். குமார். ஒரு தமிழன் பிற மாநிலத்தின் மாநகராட்சியின் மேயராக இருந்தார் என்ற பெருமை இவரை சாரும். பிம்ப்ரி சிஞ்சவட் மாநகராட்சியில் தொடர்ந்து ஆறு முறை பக்தி சக்தி உதயன் பகுதியில் தேசியவாத காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு  கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டவர் . அதில் ஒரு முறை மாநகராட்சி மேயராக இருந்தார் என்பது குறிப்பிட தக்கது. இவருக்கும் மும்பை தமிழனின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment