V.K.Raviraja

V.K. ரவிராஜா 
                            மும்பையில் தமிழர்களால் ரவிராஜா என்று அழைக்கப்படும் இவர் தமிழ்நாட்டில் இராஜபாளையம்  ஊரைச் சார்ந்த கோந்து ராஜா அவர்களின் புதல்வர். இவர்
V .K .ரவி என்ற பெயரில் தந்தையின் பெயரையும் சேர்த்து V.K.ரவிராஜா என்று அழைக்கப்படுகிறார். இவருடைய தந்தையர் காலத்திலேருந்தே மும்பையில் வசித்து வருகிறார்கள். 1978 -ம் ஆண்டிற்கு முன்பே காங்கிரஸ் கட்சியில் தொடர்பு வைத்துக்கொண்டு இருந்த இவர் 1978 -ல் காங்கிரஸ் இளைஞரணி ஆரம்பித்த நேரத்தில் மும்பை அளவில் இளைஞரணி துணைத்தலைவராக பொறுப்பு ஏற்று பணியாற்றி வந்தார். அதன் பிறகு அக்கட்சியில் வடமத்திய மாவட்ட பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.1992 -ம் ஆண்டில் கவுன்சிலர் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டு அதிக ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். 1992 முதல் 2012 வரை நான்கு முறை ஒரேப்பகுதியில் வெற்றி பெற்று மக்கள் பணியாற்றி வருகிறார். மும்பை மாநகரில் பல மொழி பேசும் மக்களிடையே தமிழ்நாட்டைச் சார்ந்த ஒருவர் 20 ஆண்டு காலமாக கவுன்சிலர் பதவியில் இருக்கிறார் என்றால் நம் தமிழர்களுக்கு பெருமைக்குரிய விசியமாகும்.மேலும் இவர் மாநகராட்சியில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக குறைந்த காலம் பணியாற்றி உள்ளார் . அதைத் தொடர்ந்து 15 வருட காலமாக பி.எஸ்.டி. கமிட்டியில் இப்பொழுதும் ஒரு உறுப்பினராக பொறுப்பில் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment