dakshanamara nadar sangam தட்சணமாற நாடார் சங்கம்.

தட்சணமாற நாடார் சங்கம்.
              1942-ம் ஆண்டு தட்சணமாற நாடார் சங்கம் திருநெல்வேலியில் உதயமானது. ஆரம்பகாலத்தில் செயல் பாடுகள் குறைவாக இருந்தாலும் இப்பொழுது  ஆலமரம் விழுதுபோல்  இருந்த போது உலகெங்கும் தன் வேர்பரப்பி தன் சமுதாயதிற்கு தன்னால் முடிந்த நல்ல காரியங்களை செய்துவருகிறது .  இடையில் தொய்வுரும் நிலையில் பலவேச முத்து நாடார் சங்கத்தின் வளர்ச்சிக்காக படுப்பட்டார் என ஒரு குறிப்பு சொல்கிறது. கல்விசெல்வமே நிரந்தரம் என்பதை நன்கு அறிந்த  தட்சணமாற நாடார் சங்கம் தெற்கு கள்ளிகுளத்தில் கல்விக்கு வழிவகுக்க கல்விச் சாலையை நிறுவியது . அது இப்பொழுது பெரிய ஒரு கல்லூரியாக உயர்ந்து நிற்கிறது. சமுதாயத்தினர் எங்கெல்லாம் படர்த்திருக்கின்றனரோ அங்கெல்லாம் சங்கம் தன் கிளைகளை பரப்பியது. தமிழன் கால்  வைக்காத இடம் வையகத்தில் இல்லை என்ற பழமொழிக்கேற்ப மும்பையிலும் தன் சமூகத்தினர் உள்ள தாராவி பகுதியில் தன் கிளையினை பரப்பியது.
கல்விக்கண் திறந்த  காமராஜர் பள்ளி.
         கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திருநெல்வேலி தட்சணமாற நாடார் சங்க மும்பை கிளையின் சார்பாக சீரும் சிறப்புமாக நிர்வகிக்கப் படும்  பாரதத்தின் வர்த்தக தலைநகரமான மும்பையில் குட்டி தமிழகம் என அனைவராலும் அழைக்கப்படும்  தாராவி 90 அடி சாலையில் அமைந்திருக்கும்  காமராஜர் நினைவு ஆங்கில பள்ளி மற்றும் இளநிலை கல்லூரி. ஆரம்பகாலத்தில் 1962-ம் ஆண்டு வெறும் ஒட்டு கூரையில் தொடங்கப்பட்ட இப்பள்ளி கூடம் இன்று விண்ணை முட்டும் அளவிற்கு ஓங்கி வளர்ந்து நிற்கிறது. இந்தப் பள்ளி கூடம் திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் பெருந்தலைவர் காமராஜர் வந்து, இப்பள்ளியை பார்வையிட்டுச் சென்றிருக்கிறார். இதனால் பெருந்தலைவர் பாத சுவடுகள் படிந்த பள்ளி என்ற பெருமையை இப்பள்ளி பெற்றிருக்கிறது. 
   தொடக்கத்தில் 1-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி தொடங்கப்பட்டது. 4-ம் வகுப்பினை நிறைவு செய்த பின்னர் மாணவர்கள் வேறு பள்ளிக்கு செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 1979-ம் ஆண்டு 10-வகுப்புவரை பள்ளி தரம் உயர்த்த பட்டது. அதன் பின்னர் ஆங்கிலத்தின் முக்கியதுவம் உணர்ந்து 1994-ம் ஆண்டு ஆங்கில பள்ளியாக மாற்றப்பட்டது. மாணவர்களின் எண்ணிக்கை பெருகிய நிலையில் போதிய கட்டிட வசதி இல்லாத நிலையில் இருந்தது.  இச்சுழலில் மாணவர்களின் மீது அக்கறைகொண்டு புதிய கட்டிடத்தினை நிறுவ மும்பை கிளையின் நிர்வாக சேர்மன் ஏ.ராமராஜா தலைமையிலான கமிட்டி தினத்தந்தி அதிபர் டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தன் மற்றும் பல சமூக நிர்வாகிகளை நாடியது. அந்த சமூக ஆர்வலர்கள் கல்வி எக்காரணத்தினாலும் தடைபடக்கூடாது எண்ணற்ற உயரிய எண்ணத்தில் தங்களால் இயன்ற உதவிகளை செய்தனர். இதன் மூலமாக திரட்ட பட்ட நிதியை கொண்டு பள்ளியின் புதிய கட்டிடம் கட்டப் பட்டது. தங்களுக்கு உதவி செய்த பெரியவர்களை கௌரவிக்கும் வகையில் டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் திருக்கரங்களால் 2009 ம் ஆண்டு  மார்ச் 3-ம் தேதி காமராஜர் நினைவு ஆங்கில பள்ளி மற்றும் இளநிலை கல்லூரி புது பொலிவுடன் உதயமானது. இப்பள்ளி ஆசிரியர்களின் சிறப்பான கற்பித்தலால் கடந்த 2004- ம் ஆண்டு முதல்  10 ம் வகுப்பு தேர்வில் 90 சதவிகிதத்திற்கும் மேல் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது வருகிறது. அதன்பின் 2009 -ம் ஆண்டு 100 சதவிகித தேர்ச்சி என்ற முத்திரை பதித்தது. இதனை தொடர்ந்து இன்னும் பல சாதனைகளை  இந்த கல்வி நிறுவனம் செய்து வருகிறது. 

No comments:

Post a Comment