eid Mubarak

இறைவனுக்காக துணிந்தது உள்ளம்.
இறைப்பணிக்காக செய்த தியாகம்.
தனது மகனை விட்டுக்கொடுத்த மாண்பு
அறிந்த உடன் தடுத்த அல்லாவின் அன்பு,

இறை நெறி அறிய,
மனித மனம் புரிய
இறைவன் வைத்த தேர்வு,
இன்னல்கள் வந்தாலும்,
நபி இப்ராஹீம் அவர்களின்,
மன உறுதி குறையாத உணர்வு.

இது தான் இன்றைய நாள்,
தியாகத்தின் திருநாள்.
அன்பு நிறைந்து,பண்புகள் மலர்ந்து,
சொந்தங்களாய் இருந்து,
கசப்புகளை களைந்து,
ஒன்றாய் வாழ்வோம்,
வாழ்த்துக்கள் சொல்லிக்கொள்வோம்.


அனைவருக்கும் (பக்ரீத்) தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!