சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (sep5)

 சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எனப்படும் வீ. இராதாகிருட்டிணன் (1888 - 1975) சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார்.

இளமைக் காலம்

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்,1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் திருத்தணியில் ஏழை தெலுங்கு நியோகி (ஆந்திராவில் உள்ள பிராமணப்பிரிவு) குடும்பத்தில் பிறந்தார். தெலுங்கு மொழியைத் தாய்மொழியாக கொண்டவர். இவருடைய தந்தை பெயர் சர்வபள்ளி வீராசாமி,தாயார் பெயர் சீதம்மா. இவர், தன் இளமைக்காலத்தை திருத்தணியிலும், திருப்பதியிலும்கழித்தார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில்முதுகலைப்பட்டம் பெற்றார்.

இல் வாழ்க்கை

ராதாகிருஷ்ணன் தன்னுடைய தூரத்து உறவினரானசிவகாமு,என்பவரை தம்முடைய 16-ம் அகவையில் மணம் புரிந்தார். இது பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டத் திருமணமாகும். இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகளும், சர்வபள்ளி கோபால் என்ற மகனும் உள்ளனர். சர்வபள்ளி கோபால், இந்திய வரலாற்று தொடர்பான துறையில் முக்கியமானவர்களில் ஒருவர். சிவகாமு 1956-ம் ஆண்டு இறந்தபோது ராதாகிருஷ்ணனுடைய 56 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவு பெற்றது.

ஆசிரிய பணி

இவர் ஆசிரியராகப் பணியாற்றியதால் இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாககொண்டாடப்படுகிறது. 1954ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment