இறையருளிய ரம்ஜான் பண்டிகை!
ஒருவன் வயிற்றுப் பசியுடன் இருக்கும் நிலைக்கும், அவன் இறைவனுக்காகவே அந்தப் பசியை ஏற்றுக் கொள்வதற்கும் வித்தியாசம் இருக்கின்றது.
மற்ற காலங்களில் பசி வந்தவுடன் பொறுமையை இழந்து விடக் கூடிய மனிதன், இறைவனுக்காகவே அந்தப் பசியைத் தாங்கிக் கொண்டிருக்கும் பொழுது, இறைவனைப் பற்றிய நினைவு அவனுக்கு அதிகப்படுகின்றது.
![]() | |||
நோன்பு மனதைக் கட்டுப்படுத்தி, அதனை அடக்குவதற்கும் பயிற்சி அளிக்கின்றது. மனதைக் கட்டுப்படுத்தும் ஆற்றலையும் இது தருகின்றது. இதன் மூலம் மனிதன் தன் மனதின் மீது ஆதிக்கம் செலுத்தி மனத்தை வென்றெடுக்க முடிகின்றது. நன்மையும், நற்பேறுகளும் எதில் உள்ளதோ அதன்பால் அதற்கு வழிகாட்டி அழைத்துச் செல்லவும் முடியும்.
ஏனெனில், மனித மனம் தீயதை அதிகம் நாடக் கூடியதாக இருக்கின்றது. எவருக்கு அல்லாஹ் கருணை புரிந்தானோ அவர்களது மனதைத் தவிர, மனிதன் தனது மனதின் கடிவாளத்தை அவிழ்த்து விட்டால் அது அவனை அழிவில் தள்ளிவிடும்! அதன் மீது அதிகாரம் செலுத்தி, அதன் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தினால் உன்னதமான பதவிகளின்பால் - உயர்ந்த குறிக்கோளின் பால் அதனை அவன் வழி நடத்திச் செல்லவும் முடியும்.
![]() | |||
இதற்காக அவன் மேற்கொண்ட முயற்சிகள் இறைவனால் ஒப்புக் கொள்ளப்பட்ட வழிகள் தானா என்று கூட அவன் பார்ப்பதில்லை. இவையே இந்த மனிதனது இம்மை, மறுமை அழிவிற்குக் காரணமாகி விடுகின்றது. அல்லாஹ் யாருக்குப் பாதுகாப்பு அளித்தானோ அவரே இதிலிருந்து பாதுகாக்கப்பட்டவர் ஆவார்.
ரமலான்


No comments:
Post a Comment