வள்ளியூர் சுற்று வட்டார மக்கள் கவனத்திற்கு...

வள்ளியூர் சுற்று வட்டார மக்கள் கவனத்திற்கு...
   மும்பையிலிருந்து நாகர்கோவில் செல்லும் இரயில் வண்டிகளில் பயணம் செய்யும் வள்ளியூர் சுற்று வட்டார மக்கள் அறிவது என்னவென்றால் மும்பையிலிருந்து வள்ளியூர் வரை பயணம் செய்யும் மக்கள் யாவரையும் பார்த்தல் பெரும்பாலனோர் பயணசீட்டு நாகர்கோவில் வரை எடுத்துள்ளார்கள். ஏன் என்று கேட்டால் வள்ளியூருக்கும் நாகர்கோவிலுக்கும் ஒரு நான்கு ரூபாய் தானே வித்தியாசம் அதனால் என்ன என்று சொல்லுகிறார்கள். அந்த நான்கு ரூபாய் உங்களுக்கு எவ்வளவு பாதிப்பு இருக்கிறது என்று நினைத்து பார்க்க வேண்டும் நான்கு ரூபாயை பெரிது படுத்தாமல் கடைசி நிறுத்தம் நாகர்கோவில்  வரை  பயண சீட்டு பெறுகிறார்கள். அதனால் வள்ளியூரில் நாள் ஒன்றுக்கு இறங்கி ஏறும் மக்கள் கணக்கு சரியான முறையில் இரயில்வே நிர்வாகத்திற்கு தெரியவருவதில்லை. வள்ளியூர் முதல் மும்பை, மும்பை முதல் வள்ளியூர் என்று பயணசீட்டு வாங்கினால் மட்டும் வள்ளியூரில்  இருந்து பயணம் செய்வோரின் எண்ணிக்கை சரியான முறையில் இரயில்வே நிர்வாகத்திற்கு தெரியவரும். இதனால் வள்ளியூரில் இரயில் நிலையத்தில் கணிணி முன்பதிவு நிறுவுவதற்கு வாய்ப்புள்ளது. அதன் பின் சுற்று வட்டார மக்கள் முன்பதிவு செய்ய நாகர்கோவில், திருநெல்வேலி என அலைய வேண்டிய நிலை மாறும். இவ்வழியாக செல்லும் அனைத்து வண்டிகளும் வள்ளியூரில் நின்று செல்ல வாய்ப்புள்ளது.  இக்கருத்தை  மனதில் கொண்டு இனி வள்ளியூர் செல்ல அல்லது வள்ளியூரில் இருந்து மும்பை வர முன்பதிவு செய்யும் போது வள்ளியூர் வரை அல்லது வள்ளியூரில் இருந்து முன்பதிவு செய்தால் நன்மையே வந்து சேரும் என்பது மும்பைதமிழனின் தாழ்மையான கருத்து

No comments:

Post a Comment