வதிலை பிரதாபனுக்கு தமிழன்னை விருது.

வதிலை பிரதாபனுக்கு தமிழன்னை விருது.
விருது வழங்கும் காட்சி


மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றச் செயலாளர் வதிலை பிரதாபனுக்கு தமிழன்னை விருது திருவையாறு தமிழய்யா கல்விக் கழகம் வழங்கியது

மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றச் செயலாளர்
வதிலை பிரதாபன் சிறந்த தமிழ்ப்பணிக்கான தமிழன்னை விருதினை பெற்றுள்ளார். இவ்விருது தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை,
திருக்குற்றாலம் அருள்மிகு பராசக்தி மகளிர் கல்லூரியுடன் இணைந்து
திருவையாறு தமிழய்யா கல்விக் கழகத்தின் சார்பாக வழங்கப்பட்டுள்ளது. திருக்குற்றாலம் அருள்மிகு பராசக்தி மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அனைத்துலக பண்பாட்டு தமிழ் ஒன்பதாவது ஆய்வு மாநாட்டின்போது வழங்கப்பட்டது. திருவையாறு தமிழய்யா
கல்விக் கழகத்தின் தலைவர் மு. கலைவேந்தன், மதிப்பியல் தலைவர் மருத்துவர் முனைவர் சு. நரேந்திரன், கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர அடிகளார் ஆகியோர் முன்னிலையில் முனைவர்
தவத்திரு குமாரசாமி தம்பிரான் இவ்விருதினை வழங்கினார்.
சான்றோர்களை பெருமை படுத்தும் மாநாட்டு விருது வழங்கும் அந்த விழாவில் ஆய்வு மாலையை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் வெளியிட முதற்படியை பெற்றவர்கள் முறையே தஞ்சை தமிழ் பல்கலை கழகத்திலிருந்து முனைவர் கோ.தெய்வநாயகம் , உலக தமிழ் பல்கலை கழகத்திலிருந்து முனைவர். ச.வே. சுப்பிமணியம் பெரியார் மணியம்மை பல்கலை கழக உதவி பதிவாளர் முனைவர் அ.வள்ளிநாயகம் மற்றும் மாநாட்டுக்குழு பொதுசெயலாளர் முனைவர் சரசுவதி ராமநாதன் மற்றும் பல அறிஞர் பெருமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்தனர்

விருது பெற காரணாமாக இருந்த கவியரசு கண்ணதாசன் இலக்கியப் பேரவைத் தலைவர் நாஞ்சில் சி.அசோகன் அவர்களுக்கும் தமிழய்யா கல்விக் கழகத்தின் தலைவர் மு. கலைவேந்தன் அவர்களுக்கும் விருது பெற்ற வதிலை பிரதாபன் தமது நன்றியினை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment