velusami naidu

பாரம்பரிய காங்கிரஸ்வாதியும் பெருந்தலைவர் காமராஜரின் பேரில் பற்றுள்ளவருமான வேலுச்சாமி நாயுடு 1968 ம் வருடம் மும்பை மாநகருக்கு வருகை தந்தார். 1974 ம் வருடம் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் காங்கிரஸ் கட்சி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அரசியலில் ஈடுபாடு இருந்தாலும், தனது சொந்த தொழிலான நியாயவிலை கடை நிர்வாகத்தையும் முறைப்படி கவனித்து வந்தார். முதன்முதலாக 1985 ம் வருடம் மாநகராட்சி உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டார்.1992 ம் வருட மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு மாநகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் தாலுகா பொதுச் செயலாளராகவும் பதவி வகித்தார். 2003 ம் வருடம் மாவட்ட தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 1994 -95 ம் வருடம் மும்பை மாநகர் தோட்டம் விளையாட்டு மைதானம் மேம்பாட்டின் சேர்மனாக பணியாற்றினார்.2003 ம் வருடம் வார்டு கவுன்சில் சேர்மனாக பதவி பெற்றார். 2008 ம் வருடம் அக்டோபர் மாதம் குடிசை மாற்றுவரிய சேர்மனாக பதவி ஏற்றுள்ளார். தனது பதவி காலங்களில் சிவாஜிநகர் , மான்கூர்டு பகுதி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளார். முஸ்லிம்கள் பெருவாரியாக உள்ள பகுதியில் 2 உருது பள்ளிக்கூடம் துவங்க ஏற்பாடு செய்துள்ளார். கோவண்டி மாரியம்மன் கோவில் வளர்ச்சிக்கும் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது. மும்பை தமிழ் மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள வேலுச்சாமி நாயுடு 1980 வருடம் கோவண்டி தமிழ் சங்க பொறுப்பையும் வகித்து வந்துள்ளார். அனைத்து மக்களிடமும் அன்புடன் பழகும் தன்மையுடன் ௨தவும் பண்புடன் மும்பை அரசியல் பிரமுகர்களில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

No comments:

Post a Comment