sivarathri

சிவராத்திரி…..
                         சிவராத்திரி என்பது ஒரு பட்டினித் துக்கநாள் ஆகும். வைஷ்ணவர்கள் சுவர்க்கம் வேண்டி, பட்டினி கிடக்கும் வைகுண்ட ஏகாதசியைப்போல சைவர்கள் என்று கருதக்கூடியவர்கள் சிவன் ராத்திரியும் (கைலாச யாத்திரை, சமாதி) பட்டினி விரதவிழா. தை, மாசி போன்ற காலங்களில் குளிர் நிறைந்துள்ளபடியால், உடல் அங்கங்கள் இயக்கம் தடுமாறும்; உண்ணும் உணவு போன்றவை சரியானபடி ஜீரணம் ஆகாமல் இருக்கும்; வயிற்று இரைச்சல் போன்ற வயிற்றுக்கோளாறு உண்டாகும்.
ஆனால், இந்தச் சிவராத்திரி விரத மகிமைப்பற்றிக் கூறப்படும் புராணக் கதைகளோ அறிவுக்கும், இயற்கைக்கும், மக்கள் நடப்பு-பண்பாடுகளுக்கும் பொருந்தாதவை ஆகும். இந்த விரதம் பற்றிக் கூறப்படும் புராணக் கதையைப் பாருங்கள்!
          முன்னொரு சமயம் ஊரும் பேரும் இல்லாத ஒரு வேடன் வேட்டைக்குச் சென்றானாம். அவனுக்குக் காலைமுதல் இரவு வரை காட்டில் அலைந்தும் எந்த விலங்கும் அவனுக்குத் தென்படவில்லை யாம். இரவு நெருங்கும் நேரமானதால் விலங்குகள் நடமாட்டம் ஆரம்பித்தன. ஒரு புலி இந்த வேடனைக் கண்டுவிட்டது. இவனைப் பின் தொடர்ந்து வந்தபடியால், அவன் உயிர் தப்ப ஓடி, ஒரு பெரிய வில்வமரத்தின் மேல் ஏறிக்கொண்டானாம். அப்போது மழையும் பெய்தது. அந்தப் புலியும் விடாமல் துரத்தி வந்து அவன் ஏறியிருந்த மரத்தின் கீழ் தங்கல் போட்டது. புலியும் அவன் இறங்குகிறானா என்று பார்த்துகொண்டே கீழே படுத்து இருந்தது. வேடன் பசி மயக்கத்தில் அதிகக்களைப்பு அடைந்து, வீடு செல்ல எண்ணியபடியால், அந்தப் புலியை விரட்ட, அந்த வில்வமர இலை களைக் கொத்து கொத்தாய் பறித்து அந்தப் புலியின் மேல் வீசினான். மழையின் காரணத்தால் அந்த இலைகளில் உள்ள ஈரப்பசையால் புலிக்குப் பக்கத்தில் உள்ள குத்துக்கல் மீது அந்த இலைகள் விழுந்தன. அது ஒரு சிவலிங்கமாம்; அன்று இரவு வேட்டை கிடைக்காததால் அந்த வேடன் பகல் முழுதும் பட்டினி.
(வேடர்கள் பொதுவாக காலையில் பழைய உணவு சாப்பிட்டு விட்டு வேட்டைக்கு வந்து வேட்டையாடிய விலங்கைக் கொண்டுசென்று, இரவு சமைத்துச் சாப்பிடுவது வாடிக்கையாதலால், பகல் முழுதும் பட்டினி என்பது சாதாரணம் தான்) அவன் மாலை மழையில் நனைந்து குளித்தது போல் ஆயிற்றாம்; அவன் புலியை விரட்ட மரத்திலிருந்து கீழே போட்ட வில்வ இலைகள் மழையின் நீரால் நனைந்து, அவனை அறியாமல் , அவன் அறியாத லிங்கத்தின் மீது விழுந்தனவாம். எனவேதான் அன்று சிவராத்திரி, இரவில் லிங்கபூசை செய்தது போல் ஆயிற்றாம். அவன் இவ்விதம் செய்தது சிவனைக் கும்பிடவேண்டும் என்ற எண்ணமில்லாமல் போனாலும், சந்தர்ப்ப வசத்தால் பகல் முழுதும் பட்டினி கிடந்தது, சிவராத்திரி பகல் உபவாசம் இருந்தது போல் ஆயிற்றாம். புலியை விரட்ட மழைத் தண்ணீரால் நனைந்த வில்வ இலைகள் லிங்கத்தின் மீது தற்செயலாய் விழுந்தபடியால், அதைக் குளிப்பாட்டி, வில்வ இலை களால் அர்ச்சனை செய்ததுபோல் ஆயிற்றாம். இதனால் அவன் வான் உலகை அடைந்தானாம்.

         ஒரு பார்ப்பன வாலிபனைப் பற்றியது. இவன் சுத்த அயோக்கியனும் ஒழுக்கக்கேடனும் ஆவானாம். இதனால் ஊரைவிட்டுத் துரத்தப்பட்டானாம். காலை முதல் இரவு முடிய உண்ண உணவு இல்லாமல், பசியால் வாடிய அவன் இரவு வந்ததும் ஒரு சிவன் கோயிலை அடைந்தானாம். அப்போது அந்த கோயில் அர்ச்சகன் பொங்கல் படையலை அந்த ஈசுவரன் சிலை முன் வைத்து விட்டு வெளியில் சென்று இருந்தான். இந்தப் பார்ப்பன வாலிபன் யாரும் இல்லாத சமயம் அங்கு சென்றபடியால் அவற்றை எடுத்து உண்ண ஆசைப்பட்டு, என்னென்ன பலகாரங்கள் இருக்கின்றன என்பது தெரியாதபடியால், இருண்ட வெளிச்சமாக இருந்ததைக் கருதி, கோயிலில் இருந்த விளக்கின் திரியை தூண்டிவிட்டானாம். அப்போது திரும்பி வந்த அர்ச்சகன் பார்ப்பன இளைஞன் பலகாரங் களை மூட்டை கட்டுவதைக் கண்டு. ஆத்திரத்தில் அவனை அடித்துக் கொன்றான். அன்று மகாசிவராத்திரியாம்.
ஒழுக்கங்கெட்ட அந்தப்பார்ப்பான், காலை முதல் இரவு வரை பட்டினி இருந்தது மகாசிவராத்திரி பகல் உபவாசம் ஆனதாம். திருட எண்ணி, பிரசாதங்களை பார்ப்பதற்கு விளக்கு வெளிச்சத்தைத் தூண்டியது சிவராத்திரியில் ஈசுவரலிங்க சிலைக்கு தீபாராதனை செய்தது போலவும் பிரசாத நிவேதனம் செய்தது போலவும் ஆனதாம். இதனால் பார்ப்பன பூசாரியால் கொல்லப்பட்டதும் நேராக சிவலோகம் சென்றானாம். சிவராத்திரியில் மனிதக்கொலை; அவன் கொலை செய்தது எந்தப் புண்ணியத்தைச் சேர்ந்ததோ?
கொலை செய்த அர்ச்சகனுக்கு எந்த லோகம் அளிப்பதோ? என்பது எல்லாம் அதில் கூறப்படவில்லை. மனிதனுக்குப் பிறப்பு அடுத்து இறப்பு வருவது இயற்கைத்தத்துவம் என்பது உண்மை. உலகில் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இயல்பாய் தெரிந்த உண்மையாகும். ஆனால், இந்த சிவராத்திரிகள் விரதங்களின் முக்கிய அடிப்படை, பகலை அடுத்து இரவு வருவதுபோல் , மனிதருக்குப் பிறப்பை அடுத்து இறப்பு வருவது என்பதுதானாம். இதைத் தெரிந்து கொள்ள பூசையும் விரதமும் வேண்டுமா? என்று தான் நாம் கேட்கின்றோம். இந்தபாழும்அர்த்தமற்ற-பொய்யான -
ஒரு காசுக்கும் உதவாத நமக்கு இழிவையும் அவமானத்தையும் தருவதான பண்டிகைகளும், உற்சவத்திற்கும், பூசைக்கும், சடங்குக்குமாகப் பொருளையும் பணத்தையும் விரயப்படுத்துவது மக்களின் அறியா மையும், சுயநலக்காரர்களின் சூழ்ச்சியும், புரோகிதர்களின் ஆதிக்கமும் தந்திரமுமே ஆகும். இவைகளை உடனடியாக ஒழிக்கவேண்டும்.

மகா சிவராத்திரி

சிவராத்திரி விரதம் வகைகள்
சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.
  1. மகாசிவராத்திரி
  2. யோகசிவராத்திரி
  3. நித்திய சிவராத்திரி
  4. பட்ஷிய சிவராத்திரி
  5. மாத சிவராத்திரி
          ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.
      விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரத்தை நிறைவு செய்தல் வேண்டும்.
           சிவாயலங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.
நான்கு யாம வழிபாட்டிற்குரிய திரவியங்கள்
  • முதல் யாமம் - பஞ்ச கவ்விய அபிஷேகம், பொங்கல், நிவேதனம், வில்வத்தினால் அர்ச்சனை.
  • இரண்டாம் யாமம் - பஞ்சாமிர்த அபிஷேகம், பாயாச நிவேதனம், தாமரை மலரால் அர்ச்சனை.
  • மூன்றாம் யாமம் - தேன் அபிஷேகம், நெய்யும் மாவும் கலந்து நிவேதனம், நந்தியாவட்டை மலர்களால் அர்சனை.
  • நான்காம் யாமம் - கருப்பஞ்சாறு அபிஷேகம், வெண்பொங்கல் நிவேதனம், நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சனை.
        இவ்விரத்தின்போது திருமுறை ஓதல் மிகச்சிறப்பானதாகும். குறிப்பாகத் தேவாரத்தில் திருவண்ணாமலைப் பதிகங்களும் சிவபுராணமும் ஓதுதல் சாலச் சிறந்தது.
            இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று பிராத்தித்தார் இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார்.






சிவராத்திரி விரத முறைகள்
    சிவராத்திரி அ‌ன்று விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி சிவசந்நதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது. அவ்வாறு பூஜை மேற்கொண்டு பூஜையைச் செய்து முடிக்க முடியாதவர்கள் கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும் பூஜை‌யி‌ல் கல‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

           
அன்று முழுவது‌ம் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌க்க வேண்டும். பகலில் உறங்கக்கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

‌           
வீ‌ட்டி‌ல் பூஜை செ‌ய்வதாக இரு‌ந்தா‌ல், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையை‌த் துவ‌க்க வே‌ண்டு‌ம்.

               
ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம்.

                  
சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம்.

              
பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும். சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா,பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

             
பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோயிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.

‌               
சிவனு‌க்கு செ‌ய்ய‌ப்படு‌ம் அ‌பிஷேக‌ங்களு‌க்கான பொரு‌ட்களை வா‌ங்‌கி கொடு‌‌த்து பூஜை‌யி‌ல் கல‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

              
இர‌வி‌ல் ‌சிவனு‌க்கு செ‌ய்ய‌ப்படு‌ம் பூஜைக‌ள் கு‌றி‌த்த முழு ‌விவர‌மு‌ம் இ‌ங்கு தர‌ப்ப‌ட்டு‌ள்ளது. அத‌ற்கே‌ற்ற பொரு‌ட்களை ‌நீ‌ங்க‌ள் வா‌ங்‌கி அ‌ளி‌க்கலா‌ம்.

         
முதல் சாமம்:- பஞ்சகவ்ய அபிசேகம் - சந்தனப்பூச்சு - வில்வம், தாமரை அலங்காரம் - அர்ச்சனை பச்சைப் பயிற்றுப் பொங்கல் நிவேதனம் - ருக்வேத பாராயணம்.

       
இரண்டாம் சாமம்:- சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த பஞ்சாமிர்தம் அபிசேகம் - பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்துச் சார்த்துதல், துளசி அலங்காரம் - வில்வம் அர்ச்சனை - பாயாசம் நிவேதனம் - யசுர் வேத பாராயணம்.

     
மூன்றாம் சாமம்:- தேன் அபிசேகம் - பச்சைக் கற்பூரம் சார்த்துதல், மல்லிகை அலங்காரம் - வில்வம் அர்ச்சனை - எள் அன்னம் நிவேதனம் - சாமவேத பாராயணம்.

     
நான்காம் சாமம்:- கரும்புச்சாறு அபிசேகம் - நந்தியாவட்டை மலர் சார்த்துதல், அல்லி நீலோற்பலம் நந்தியாவர்த்தம் அலங்காரம் - அர்ச்சனை - சுத்தான்னம் நிவேதனம் - அதர்வன வேத பாராயணம்.
         

அன்றையதினம் இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை பூஜையையு‌ம், உச்சிக்கால பூஜையையு‌ம் அப்போதே முடிக்க வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். 
       அதன் பின் உபதேச‌ம் தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம். 
        சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும்.
                  
இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.
                 
பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடை‌பிடி‌ப்பத‌ற்கு ஈடாகாது.
    சிவன் மங்களன். சிவனை வழிபடுபவர்கள் மங்களங்களை அடைகிறார்கள். 'சிவ' என்ற சொல்லே மங்களத்தைக் குறிப்பது, சிவபூஜை எல்லா பூஜைகளிலும் தனித்தன்மையுடன் துவங்குவது, சிவபூஜை செய்பவர்களின் பாவமாகிய பஞ்சு மூட்டைகள் எரிந்த இடம் தெரியாமல் பறந்து, மறைந்து போகின்றன.
         சிவனை மட்டும் வழிபடுபவர்களுக்கு இத்தகு மேன்மைகள் என்றால், அவனுடன் அன்னையையும் சேர்த்து வழிபடுபவர்கள் அடையும் நன்மைக்கோ அளவே இல்லை.
      பூஜைகளில் சிறந்த பலனை நிறைந்தும், உடனேயும் தருவது ராத்ரீபூஜைகளே. இதனால்தான் ஷ'ராத்ரீ சூக்தம்' என்ற சூக்தமும் தனித்து விளங்குகிறது. 'பிராத சூக்தம்' என்று தனி சூக்தம் கிடையாது. ஒவ்வொரு தினத்திற்கும் ராத்திரி இருப்பது போல ஒவ்வொரு உயிருக்கும் ராத்திரி இருக்கிறது.
          எல்லா ராத்திரிகளிலும் உயர்ந்தது சிவராத்திரியே. ராத்திரிகளில் வரும் நவராத்திரி பூஜையின் பூரண பலனை ஒரே ராத்திரியான சிவராத்திரி பூஜை வழங்கக் கூடியது. நவராத்திரி பூஜையில் அன்னைக்கு மட்டுமே சிறப்பு. சிவராத்திரி அன்னைக்கம் அப்பனுக்கும் உரியது. எனவேதான் சிவராத்திரி சிறந்ததாக விளங்குகிறது.
             சிவனை மட்டுமே சிவராத்திரியில் வழிபடுபவர்கள் பாதிப் பலனையே அடைவார்கள். அன்னையையும் சேர்த்து வழிபடுவர்களே முழுப்பலனையும், மேன்மையையும் அடைவார்கள். சக்தியைத் தள்ளிச் சிவனை மட்டும் வழிபட நினைப்பது சிவத்துரோகமாகும்.
            தூக்கம் என்பது மனிதனுக்குக் கிடைத்த சொர்க்கம். தூக்கம் இல்லாமல் போனால், துக்கம்தான் ஏற்படும். உடலும் உள்ளமும் உலர்ந்து போய், விரைவில் இறப்பை நோக்கி நடக்க வேண்டி வரும். உறங்கி எழுந்தவன் உழைக்கிறான். உறக்கம் கிட்டாதவன் அழுகிறான். உடலுக்கும் உள்ளத்திற்கும் ஓய்வு தந்து, மீண்டும் உழைக்க உயிர் தந்து காப்பது ராத்திரியே. இதைத் தந்து காத்தது சிவமும் சக்தியும்தான். எனவேதான், சிவனையும் தேவியையும் ராத்திரிகளில் வழிபடுகிறோம்.
            இரவில் சாந்தியையும் ஒடுக்கத்தையும் தந்து காத்தவன் சிவன். அந்த ஒடுக்கத்தில் இருந்து மீண்டும் எழுந்து நடக்கச் செய்தவள் தாய். அன்னை அப்படிச் செய்யவில்லையென்றால் தூங்கியவன் தூங்கியவனே, எழுப்பினால் எதுவும் எழாது.எனவே சாந்தியும் ஒடுக்கமும் தந்த சிவத்திற்கு ஒரு ராத்திரியும், எழுந்து விழிப்புடன் தனது பழைய கர்ம மூட்டைகளைச் சுமந்து விரைவில் விடுதலை பெறச் செய்யும் அன்னைக்கு ஒன்பது ராத்திரிகளும் அமைத்த பெருமை நம் முன்னோடிகளான முனிவர்களைச் சார்ந்தது.
ஐந்து சிவராத்திரிகள்
           ஐந்து நவராத்திரிகள், அதாவது ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி, மஹா நவராத்திரி, வசந்த நவராத்திரி, வன்ய நவராத்திரி இருப்பது போல சிவராத்திரிகளிலும் ஐந்து உண்டு.
நித்திய சிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, பரிச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மஹா சிவராத்திரி என்பன அவை.
நித்திய சிவராத்திரி
            ஒவ்வொரு சதுர்தசியிலும் சிவனை நான்கு காலங்களிலும் முறைப்படி பூஜை செய்ய வேண்டும். இப்படி ஒரு வருஷத்தில் இருபத்தி நான்கு சதுர்தசியில் இரவில் பூஜை செய்து வழிபடுவதற்கு நித்திய சிவராத்திரி என்று பெயர்.
பக்ஷ சிவராத்திரி
             தை மாதம் தேய்பிறை பிரதமையன்று தொடங்கித் தொடர்ந்து பதின்மூன்று நாட்கள் இரவில் சிவபூஜை செய்ய வேண்டும். பின்னர் சதுர்த்தசியில் பூக்ஷையை நிறைக்க வேண்டும். நான்கு காலத்திற்குப் பதில், பக்ஷ சிவராத்திரியில் ஒரு காலம் பூஜை செய்தால் போதுமானது என்பது கொள்கை.
          ரோகங்கள் விலகவும், உன்மத்த ரோக சமனம் ஏற்படவும், இது துணையாவது. இதை ரோகிகளுக்காக மற்றவர்கள் கூடச் செய்யலாம்.
மாத சிவராத்திரி
          மாத சிவராத்திரி என்பது ஒவ்வொரு மாதமு வருவது. மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்தசி அம்மாதத்திய சிவராத்தியாகும். பங்குனி மாதத்தின் ஆரம்பத்தில் வரும் த்ருதியை அம்மாத சிவராத்திரி. சித்திரை மாதத்தில் தேய்பிறை எட்டாம் நாள் அம்மாத சிவராத்திரி. வைகாசி மாத முதல் அஷ்டமியும், ஆவணி மாதத்தில் வளர்பிறை அஷ்டமியும், அம்மாத சிவராத்திரிகளாகும். புரட்டாசி மாதத்தில் முதல் த்ரயோதசியும், ஐப்பசி மாதத்திய வளர்பிறை துவாதசியும் அம்மாதங்களின் சிவராத்திரிகளாகும். இதைப் போலவே கார்த்திகை மாதத்திய முதல் சப்தமி அஷ்டமியும், மார்கழியில் இரு பக்ஷ சதுர்தசிகளும் தை மாதத்தில் வளர்பிறை திருதியையும் மாத சிவராத்திரிகளாகும்.
              மாத சிவராத்திரிகளில் பூஜை செய்பவர்களுக்கு மரண பயம் இல்லை. சிவலோகத்தையும், சிவசாயுஜ்யத்தையும் அடைவார்கள். மாத சிவராத்திரிகளில் சிவபூஜை செய்பவர்களுக்கு சுகவாழ்வும் பரத்தில் கைவல்யமும் கிட்டும்.
யோக சிவராத்திரி
                 திங்கட்கிழமையன்று அறுபது நாழிகையும் அமாவாசையாக இருந்தால் அந்த அமாவாசை யோகிகளுக்கு மிகவும் உயர்ந்தது. சித்தர்களுக்கு மிகவும் சிறந்தது. இது யோக சிவராத்திரி எனப்படும்.
            யோக சிவராத்திரியில் யோகியானவன் யோக பூஜை செய்ய வேண்டும். யோக சித்தியை இது வழங்கும். யோகியர் அல்லாத மற்றவர்கள் யோக சிவராத்திரியில் பூஜித்தால் ஆத்ம ஜோதியில் சிவத்தைத் தரிசனம் காண ஏதுவாகும்.
மஹா சிவராத்திரி
           மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குவது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது.
மஹா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும் இரவில் பூஜை செய்ய வேண்டும். சிவபஞ்சாயதனம் கைக்கொண்டவர்கள் இரவில் பூஜையைத் தரித்து நற்பலன் பெற வேண்டும்.
                 சிவராத்திரி என்ற சொல்லே மோக்ஷம் தருவது. சிவராத்திரியில் 'சிவபுராணம்' என்ற மாணிக்கவாசகர் அருளிய பாடல்கள் பாராயணம் செய்யச் சிறந்த தோத்திரமாகும். சிவராத்திரியில் மெளன விரதம் இருப்பது வாக்குவலிமையையும், மந்திர சித்தியையும் தரும். பஞ்சாக்ஷர யந்திரத்தைப் பூஜித்து, பஞ்சாக்ஷர ஜெபம் செய்து இந்த நாளில் சித்தி அடையலாம். மஹா ம்ருத்யுஞ்சய மந்திரத்தை ஒரு லட்சம் ஜெபம் செய்து பத்தாயிரம் ஹோமம் செய்தால் இந்த மந்திரம் பரிபூரண சித்தியாகும். இயலாதவர்கள் பஞ்சாக்ஷர சம்புடமாக ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜெபம் செய்யலாம்.


View Larger Map
எலிபண்டகுகைகள்   :                                                                                                                                                                                     ,                                          மும்பாய் கரைக்கு அப்பால், மும்பாய்த் துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள காராப்புரி (Gharapuri) தீவில் அமைந்துள்ளன. போத்துக்கீசர் இத்தீவுக்கு எலிபண்டாத் தீவு எனப் பெயரிட்டனர். 1987 ஆம் ஆண்டில் இக் குகைகள் யுனெஸ்கோ உலக பண்பாட்டுக் களம் என அறிவிக்கப்பட்டது. பல உள்நாட்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இங்குள்ள சிற்பங்களைத் துப்பக்கி சுடும் பயிற்சிக்கு இலக்காகப் போத்துக்கீசர் பயன்படுத்தியதனால் பல சிற்பங்கள் சிதைக்கப்பட்டு உள்ளன.
இக் குகைகள் 9 தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு உட்பட்ட சில்காரா அரசர்களில் காலப் பகுதியைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இவ்விடத்தைச் சேர்ந்த சில சிற்பங்கள் ராஷ்டிரகூடர் காலத்தைச் சேர்ந்தவையாகவும் கருதப்படுகின்றன. எலிபண்டாவின் திரிமூர்த்தி சிலை எனப்படும் சிவன் சிலையின் மூன்று முகங்கள் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. இது ராஷ்டிரகூடர்களின் அரச சின்னமும் ஆகும். நடராசர், சதாசிவன் ஆகியோரின் புடைப்புச் சிற்பங்களும், அர்த்தநாரீஸ்வரர் சிலைகளும் ராஷ்டிரகூடர் காலத்தைச் சேர்ந்த பிற கலைப் படைப்புக்களாகும்.
இக் குடைவரைக் கோயில் தொகுதி சுமார் 60,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்விடத்தில், அழகிய புடைப்புச் சிற்பங்களும், சிற்பங்களும், ஒரு சிவன் கோயிலும் உள்ளன. குகைகள் பாறையில் குடையப்பட்டுள்ளன.




gateway of india

எலிபண்டா குகைகள், மும்பாய் கரைக்கு அப்பால், மும்பாய்த் துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள காராப்புரி (Gharapuri) தீவில் அமைந்துள்ளன. போத்துக்கீசர் இத்தீவுக்கு எலிபண்டாத் தீவு எனப் பெயரிட்டனர். 1987 ஆம் ஆண்டில் இக் குகைகள் யுனெஸ்கோ உலக பண்பாட்டுக் களம் என அறிவிக்கப்பட்டது. பல உள்நாட்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இங்குள்ள சிற்பங்களைத் துப்பக்கி சுடும் பயிற்சிக்கு இலக்காகப் போத்துக்கீசர் பயன்படுத்தியதனால் பல சிற்பங்கள் சிதைக்கப்பட்டு உள்ளன.
இக் குகைகள் 9 தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு உட்பட்ட சில்காரா அரசர்களில் காலப் பகுதியைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இவ்விடத்தைச் சேர்ந்த சில சிற்பங்கள் ராஷ்டிரகூடர் காலத்தைச் சேர்ந்தவையாகவும் கருதப்படுகின்றன. எலிபண்டாவின் திரிமூர்த்தி சிலை எனப்படும் சிவன் சிலையின் மூன்று முகங்கள் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. இது ராஷ்டிரகூடர்களின் அரச சின்னமும் ஆகும். நடராசர், சதாசிவன் ஆகியோரின் புடைப்புச் சிற்பங்களும், அர்த்தநாரீஸ்வரர் சிலைகளும் ராஷ்டிரகூடர் காலத்தைச் சேர்ந்த பிற கலைப் படைப்புக்களாகும்.
இக் குடைவரைக் கோயில் தொகுதி சுமார் 60,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்விடத்தில், அழகிய புடைப்புச் சிற்பங்களும், சிற்பங்களும், ஒரு சிவன் கோயிலும் உள்ளன. குகைகள் பாறையில் குடையப்பட்டுள்ளன.
எலிபண்ட குகைகள்  


View Larger Map