bombay Thiruvalluvar mantram.
தோற்றமும் வளர்ச்சியும் :
திராவிட முன்னேற்ற கழகம் 1951 - ம் ஆண்டு இறுதியில் பம்பாய் நகரின் தாராவி எனும் பகுதியில் தொடங்கப்பட்டது. தொடக்கநாள் தலைவர்களாக இருந்தவர்கள் நெல்லை செழியன், சு.வள்ளிநாயகம், ம.இரா.எ.இரத்தினசாமி, சுபகுமார், எஸ்.தியாகராஜன் எனும் தலைவர்கள் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் கூட்டம் 1952 ம் ஆண்டின் முற்பகுதியில் தாராவியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் முக்கிய பேச்சாளர்களாக நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும் திருமதி.சத்தியவாணி முத்து அவர்களும் கலந்து கொண்டனர். முதல் நாள் சமுதாயச் சீர்திருத்தம் பற்றியும் இரண்டாம் நாள் அரசியல் கூட்டமாகவும் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்க் கொள்கையான திராவிட நாடு பற்றியும் மக்களிடையே மலிந்து கிடந்த மூடபழக்கவழக்கங்களை பற்றியும் இரு பேச்சாளர்களும் பேசினர். அவர்களின் சொற்பொழிவு மக்களுக்கு ஒரு புதுமையானதாக அமைந்து அவர்களிடையே ஒரு உணர்ச்சிமிக்க உற்சாகத்தையும் எழுச்சியையும் ஏற்படுத்தியது.
அதே ஆண்டின் நடுப்பகுதியில் பம்பாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் கலந்து கொண்ட இலக்கிய நிகழ்ச்சி மாதுங்காவில் நடைபெற்றது. முத்தமிழ்க் காவலர் அவர்கள் பெரியாரோடும், நீதிகட்சியோடும், திராவிட இயக்கத்தோடும் தொடர்பு கொண்டவராதலால் அவருடைய சொற்பொழிவைக் கேட்கத் தாராவித் தமிழர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். திருக்குறள் பற்றியும் தமிழ் இலக்கியம் பற்றியும் அவர் பேசியதைக் கேட்டு இலக்கிய சுவையுடையவர்கள் பெரிதும் மகிழ்ந்தனர்.
1952 ம் ஆண்டின் நவம்பர் திங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாவது பொதுக்கூட்டம் தாராவில் நடைபெறுவதாகவும் அக்கூட்டத்தில் கலைஞர்.கருணாநிதி அவர்களும் என்.வி.நடராஜன், கவிஞர்.கண்ணதாசன், இராம.அரங்கண்ணன் ஆகியோர் கலந்து கொல்வதாக செய்தி வெளிவந்தது. அச்சமயம் தாராவில் வாழ்ந்துவந்த தமிழர்கள் சிலர் பாண்டுப் பகுதிக்கு குடியேறிய காரணத்தால் பாண்டுப் பகுதிலும் திராவிட இயக்கக் கொள்கைகளைப் பரப்ப வேண்டும் எனத் திட்டமிட்டு தாராவியில் பேசவிருக்கும் தலைவர்களைப் பாண்டுப்புக்கும் அழைத்துவந்து ஒரு கூட்டம் நடத்தவேண்டும் என்று திட்டமிட்டனர். அதன் அடிப்படையில் பாண்டுப் தமிழ் மன்றம் எனும் பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி அதன் சார்பில் கழகத் தலைவர்களை அழைக்கலாம் என தோழர்கள் பலர் எண்ணினார்.
திரு.ம.தே.இராசன் அவர்களை தலைவராகவும் திரு.மனுவேல்ராஜ் என்பவரை செயலாளராகவும், திரு.வி.தேவதாசன் அவர்களை பொருளாளராகவும் மற்றும் பலரை உறுப்பினர்களாகவும் கொண்டு பாண்டுப் தமிழ் மன்றம் எனு பெயரில் செயற்குழு ஒன்று அமைக்கபெற்று பொதுமக்களிடம் நன்கொடை திரட்டப்பட்டது.
இரண்டு நாட்கள் தாராவியில் தி.மு.கழகக் கூட்டம் நடைபெற்றது. நாவலர் சொற்பொழிவைக் கேட்டு மயங்கிய மக்களை காட்டிலும் அதிக அளவு பொதுமக்கள் அக்கூட்டத்தில் கலந்து கலைஞரின் பேச்சையும் ,இதர தலைவர்களின் பேச்சையும் கேட்டு மகிழ்ந்தனர். தமிழகத்தில் அப்பொழுது இராஜாஜி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வந்தது. அச்சமயம் இந்தி எதிப்பு இயக்கம் தமிழகத்தில் வேகமாக பரவி வந்தது. இந்தி எதிர்ப்பையும் திராவிட நாடு கோரிக்கையையும் சமூகசிர்த்திருதம் மற்றும் மூடப்பழக்கவழக்கங்கள் பற்றியும் இத்தலைவர்கள் பேசினர்.
கூட்டம் முடிந்த பின் ரிவோலி தியேட்டர் அருகில் உள்ள தங்கு விடூதிக்கு சென்று மறுநாள் பாண்டுப் தமிழ் மன்றத்தின் சார்பில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துக் கொள்ளவேண்டும் என்று பாண்டுப் நண்பர்கள் தலைவர்களிடம் கோரிக்கை வைத்தனர். நாளை இரவு சென்னை திரும்புகிறோம். இதற்கிடையில் பம்பாய் நகரத்தின் சில பகுதிகளை பகலில் பார்க்க திட்டமிட்டுள்ளோம் எனவே மன்னித்துக்கொள்ளுங்கள் மீண்டும் ஒருமுறை வரும் சமயம் கட்டாயம் வருகிறோம் என்று கலைஞர் அவர்களும் ஏனைய தலைவர்களும் கூறினர்.
தமிழ் மன்றத்தின் சார்பில் கூட்டச் செலவுக்கென வசூலித்த ரூபாய் நூறு கலைஞர் அவர்கள் வருகைதர மறுத்த காரணத்தால் செலவு ஆகாது மிச்சத் தொகையாக இருந்ததால் அத்தொகையிலிருந்து ரூபாய் அறுபது முன்பணமாக கொடுத்து ரோட்ரிக் சாலில் ஒரு அறை வாடகைக்கு வாங்கப்பட்டு ரூபாய் இருபது அதன் முதல் மாத வாடகையாக கொடுக்கப்பட்டது. மீதமுள்ள ரூபாய் இருபதுடன் மேலும் சிறிது பணம் சேர்க்கப்பட்டு ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கு வாங்கப்பட்டது. நாள்தோறும் அந்த அறையில் மண்எண்ணெய் விளக்கு எரியும். ஞாயிறு மற்றும் இதர விடுமுறை நாட்களில் மட்டும் பெட்ரோமாக்ஸ் விளக்கு எரியும்.நண்பர்கள் விடுமுறை நாட்களில் கூடி செய்தித்தாள்களை படிப்பது வழக்கம். இந்தபடிப்பகம் நல்ல முறையில் இயங்கி வந்தது. தோழர்கள் பகலிலும் மாலை வேளைகளிலும் படிப்பகதிற்க்கு வருகை தந்து பயன் அடைந்தனர்.
இந்நிலையில் ஒரு நாள் பாண்டூப்பின் மற்றொரு பகுதில் வாழ்ந்து வந்த சில நண்பர்கள் தமிழ் மன்ற நிர்வாகிகளை அணுகி நாங்களும் எங்கள் பகுதியில் முத்தமிழ் மன்றம் எனும் அமைப்பை நடத்தி வருகிறோம். பாண்டூபில் வாழும் தமிழர்கள் மிகவும் குறைவு இந்நிலையில் நமக்குள் ஏன் இரண்டு சங்கம். நாம் அனைவரும் சேர்ந்து இருப்போமே என்று வேண்டிக்கொண்டதற்கிணங்க கூடிப் பேசத் தொடங்கினர்.
இருதரப்பினரும் அவரவர் நடத்திவரும் அமைப்பின் பெயரையே வைக்க வலியுறுத்தினர். தலைமை வகித்தவர் முதலில் முத்தமிழ் மன்றத்தினரை அழைத்து பவர்களின் அமைப்பை பற்றி விசாரித்தார். அவர்கள் தங்களிடம் கூட்டக்குறிப்பு புத்தகமும் ,சிறிது பணமும் இருப்பதாகவும் கூறினர். தமிழ் மன்றத்தினர் தங்களிடம் சிறிதளவு பணத்துடன் அதிகமாக பணிமனையும் ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கும் உள்ளதாக வாதிட்டனர். நடுவர் இருதரப்பு வாதங்களையும் விசரித்தப்பின் பாண்டூப் தமிழ் மன்றம் எனும் பெயரில் மன்றத்தினை செயல் படுத்துமாறு குரியதநினை இரு தரப்பின்னரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். தற்போது இயங்கி வரும் பணிமனை ரோட்ரிக் சாலில் இருப்பதினால் இருவருக்கும் பொதுவான இடத்தினில் பணிமனையை இயக்க முடிவெடுத்ததுடன் தமிழ் மன்றம் முறையாக இயங்குவதற்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க தேர்தலும் நடத்தப்பட்டது. அதில் புதிய தலிவராக மா.தே.இராசன் .தலைவராகவும் செயலாளராக எஸ்.தியாகராஜன்,பொருளாளராக வி.தேவதாசன் மற்றும் உறுப்பினர்களாக திருவாளர்கள் தேசிகன்,மகாதேவன், எம்.எம்.டேவிட், மனுவேல் ராஜ், அருணாச்சலம், ஆகியோர் உட்பட 11 பேர் கொண்ட நிவகக் குழு இயங்க துவங்கியது. ஆண்டுதோறும் தேர்தல் நடத்தி புதிய நிர்வாக குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. முறையாக செயல் பட்டுவந்த தமிழ் மன்றம் சில ஆண்டுகளில் பிளவுப்பட தொடக்கியது.மன்றத்தின் பணிமனை படிப்பகமாகவும் செயல்பட்டு வந்ததால் முதியவர்களும் இளைஞர்களும் செய்திதல்களை படிப்பதினை வழக்கமா கொண்டிருந்தார். தினமணி நாளிதழ் மட்டும் மன்றத்தின் சார்பாக வாங்கப்பட்டு வந்தது. ஏனைய இதழ்களை எவரேனும் நன்கொடை வழங்குவதாகருந்தால் ஏற்றுக்கொல்லாம் என தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனவே நாளடைவில் திராவிட இதழ்கள் வந்து கூவிய ஆரம்பித்தது. இதனால் ஒரு சிலர் மனகசப்புக்குள்ளனர். கழக இதழ்களுடன் விடுதலை இதழ்களும் பட்டியலில் இடம்பெற ஆரம்பித்தது. எனவே செயற்குழு உறுப்பினர்கள் சிலர் இதர இதழ்கள் இருந்தால் பரவாயில்லை ஆனால் விடுதலை இதழ்களால் தடைசெய்ய வேண்டும் என வாதிட்டனர், இதன் காரணமாக தமிழ் மன்றம் இரண்டாக விளைவு பட தொடங்கியது. விடுதலை இதழ் தடை செய்த காரணத்தினால் அதன் மிது நாட்டமுள்ள சிலர் தனியாக திராவிடமுன்னேற்ற கழகத்தின் பாண்டூப் கிளையினை துவங்கினர். மன்றத்தின் பணிமனைக்கு மாதம்தோறும் இருபத்தைந்து ரூபாய் வாடகை செலுத்த வேண்டி இருந்ததினால் இரவில் ஓரிரு தனி நபர்களை தங்க வைத்து அவர்களிடம் இருந்து கிடக்கும் தொகையை வாடகையாக செலுத்த துவங்கினர். இதனால் மன்றத்தின் செயல் பாடுகள் முடங்க ஆரம்பித்தது. நாளடைவில் பாண்டூப் தமிழ் மன்றம் வெறும் பெயரளவில் மட்டும் செயல்பட்டு வந்தது. இருப்பினும் திமுகழகத்துடன் இணைத்து புரட்சி கவிஞர் பாரதிதாசன் அவர்களும் சில தலைவர்களும் அவ்வபோது வந்து கலந்துரையாடல் நடத்திவந்தது. இருப்பினும் தமிழர்களுக்கென ஒரு தமிழ் அமைப்பு தேவைப்பட்டது.
பம்பாய் திருவள்ளுவர் மன்றம்.
தோற்றமும் அதன் வளர்ச்சியும் :
1960 - ஆண்டு டிசம்பர் திங்களில் பாண்டூப் மற்றும் டாக்கியார்டு காலணி தமிழ் மக்கள் ஒன்று கூடி 1961- சனவரியில் பொங்கல் விழாவினை சிறப்பாக நடத்தவேண்டும் என முடிவு செய்து ஒரு விழாக்குழு அமைத்தனர்.
இவ்விழாக்குழுவின் தலைவராக க.பாஷ்யம் அவர்களும் செயலாளராக் வி.தேவதாசன் மற்றும் ஆர்.ஏ.இராசன் பொருளாளராகவும் செயற்குழு உறுப்பினர்களாக திருவாளர்கள் ப.க.முத்தையா, வரதராசன்,சூசை, வ.க.சுவாமிநாதன், பீட்டர், இராசன், கீ.இராசகோபால், சுந்தரமூர்த்தி, ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பொங்கல் திருநாளுக்கு பின் வரும் சனி மற்றும் ஞாயிறு இரு தினங்கள் விழாவினை நடத்துவது எனவும் சிறப்புவிருந்தினராக கீ.ஆ.பெ.திருச்சி .விஸ்வநாதம் அவர்களை அழைப்பது எனவும் விழாவிற்கான செலவுகளை பொது மக்களிடம் நன்கொடையாக வசூலிப்பது எனவும் முடிவு செய்தனர்.
அதன் படி முத்தமிழ் காவலர் கீ.ஆ.பெ.அவர்களுக்கு திருச்சி முகவரிக்கு கடிதம் ஒன்று எழுதப் பெற்றது. சில நாட்கள் கழித்து திரு.கீ.ஆ.பெ. அவர்களிடம் இருந்து பதில் வந்தது. அதில் தங்கள் மடல் கிடைக்க பெற்றேன் நான் விழாவில் கலந்து கொள்வதாக இருந்தால் எனக்கு முதல் வகுப்பு ரயில் கட்டணமும் தமிழக புலவர்க் குழுவுக்கு ரூ.100/- நன்கொடையாகவும் வழங்கவேண்டும், இதற்க்கு ஒப்பு கொள்வீர்களானால் எனக்கு எழுதுங்கள் என எழுதப்படிருந்தது.
இந்த விவரம் பொங்கல் குழுவினரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அவர்களின் சம்மதத்துடன் வழிச்செலவு தொகையும் அனுப்பிவைக்கப்பட்டது. சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு முத்தமிழ்காவலர் அவர்களிடமிருந்து மற்றும் ஒரு கடிதம் வந்தது. அதில் தங்கள் பணம் கிடைக்க பெற்றேன்.என்ற பதிலுடன் சென்னையில் அன்பு பழனி எனும் பெயரில் தனக்கு ஒரு நண்பர் உள்ளதாகவும் அவர் தன் சொந்த செலவில் பம்பாய்க்கு வரவிரும்புகிறார் அவர் ஒரு இளைஞர் மற்றும் நல்ல தமிழ் பேச்சாளரும் ஆவார். தாங்கள் விரும்பினால் அவரையும் என்னுடன் அழைத்து வருகிறேன் இதற்க்கு நீங்கள் ஒப்புவீர்களேயானால் திரும்பிவரும்போது அவருக்கு ஒரு மூன்றாம் வகுப்பு பயணசீட்டு சென்னைக்கும் எனக்கு ஒரு மூன்றாம் வகுப்பு பயணச்சிட்டு திருச்சிக்கும் எடுத்துவிட்டு பதில் எழுதுங்கள் என்று இருந்தது. இதற்கும் இணக்கம் தெரிவித்தனர்.
குறித்தப்படி சனி,ஞாயிறு என இருநாட்கள் விழாவில் கலந்துக்கொள்வதற்காக முதல் நாள் சனிக்கிழமை பகல் ஒரு மணியளவில் பம்பாய் வந்து சேரவிருந்த கீ.ஆ.பெ.அவர்களை வரவேற்க்க தாதர் ரயில் நிலையத்தில் விழாக்குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூடிமுதல் வகுப்பு பெட்டியின் அருகில் கூடி நின்றனர். ஆனால் எதிர்பார்த்த படி கீ.ஆ.பெ.அவர்கள் முதல் வகுப்பில் வரவில்லை. அப்போது தொண்டரொருவர் கீ.ஆ.பெ.அவர்கள் மூன்றாம் வகுப்போ பெட்டியில் இருந்து இறங்குகின்றார். என தெரிவித்தார். உடனே விழாக்குழுவினர் கீ.ஆ.பெ.அவர்களிடம் சென்று அவருக்கு மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பொங்கல் விழாக்குழுவின் தலைவர் திரு.பாஷ்யம் அவர்கள் காட்கோபர் இராஜாவாடியில் இல்லம் அமைந்திருந்ததால் கீ.ஆ.பெ.மற்றும் அன்புபழனி ஆகியோரை அழைத்துக்கொண்டு இராஜாவாடி சென்றனர். அங்கு அவர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. முதல் நாள் பொங்கல் விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது. விழாவுக்கு முக்கிய பிரமுகர்கள் பலர் அழைக்கப்பட்டிருந்தனர். வட்டாரத்தலைவர்கள் பலர் பேசியபின் அன்புபழனி அவர்கள் பொங்கல் விழாவின் சிறப்பு குறித்து ஒரு சிற்றுரையாற்றினார். அதனை தொடர்ந்து கீ.ஆ.பெ.அவர்கள் பொங்கல் விழாதான் தமிழர்களின் புத்தாண்டு என பலநூறு ஆண்டுகளாக கொண்டாட பட்டு வருகிறது. இவ்விழாவினை பம்பாயில் வாழும் தமிழர்களுடன் கொண்டாடுவதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் என ஆரம்பித்து பொங்கல் விழாவின் சிறப்பினை குறித்த பல அரிய விசயங்களை மக்களிடையே தெரிவித்தார். அவருடைய உரையினை தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முதல்நாள் விழா இனிதே நிறைவு பெற்றது.
இரண்டாவது நாள் திருவள்ளுவர் தினம் எனும் பெயரில் நடைபெற்றது. திருக்குறள் சொற்பொலிவிற்கு பின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்த இரண்டுநாட்கள் விழாவும் பொதுமக்களின் நன்கொடை பணத்தில்தான் நடைபெற்றது.
மறுநாள் காலை கீ.ஆ.பெ. அவர்களும் அன்புபழனி அவர்களும் பம்பாயிலிருந்து புறப்பட இருந்ததினால் இருவருக்கும் உரிய பயண சீட்டு மற்றும் செலவு தொகை தமிழக புலவர்குழுவிற்கான நன்கொடை முதலானவற்றை கொடுப்பதற்கு அவர் தங்கியிருந்த அறைக்கு சென்றனர். முத்தமிழ் காவலர் அவர்கள் தன் அருகில் இருந்த அன்புபழனி அவர்களை பார்த்து தம்பி தங்களிடம் உள்ள நமது வரவு செலவு கணக்கிட்டு மிச்ச மிருந்தால் கொடுத்துவிடுங்கள் குறைந்தால் அவர்கள் ஏற்கனவே அவர்கள் கொடுத்த தொகையிலிருந்து கழித்து குறைத்ததை பெற்று கொள்ளுங்கள் என்றார்.அதற்கு அன்பு பழனி ஐயா இவர்கள் அனுப்பிய பணத்தில் சிறிது செலவு போக மீதமுள்ளது அதனை அவர்களிடம் கொடுத்து விடலாமா என்றார். அவரின் பேச்சை கேட்ட அனைவரும் திகைத்துநின்றனர். அதற்க்கு திரு.கீ.ஆ.பெ.அவர்கள் கூறினார் தாங்கள் எனக்கோ அனுப்பிய பணத்தில் நான் மூன்றாம் வகுப்பு சீட்டில் பயணித்தனால் ஒரு பெரும் தொகை மீதம் இருந்தது. அதனை நான் புலவர்குழு நன்கொடையாக எடுத்துக்கொண்டேன். அதனால் உங்கள் பணம் மிஞ்சியது. என்றார் விளக்கமாக அதன் பின் மறுநாள் விழாக்குழுவின் முக்கிய பிரமுகர்கள் பலர் அவரை சென்னைக்கு வழியனுப்பி வைத்தனர்.
இந்த விழாவிற்கு பின் இரண்டு,மூன்று ஆண்டுகள் பொங்கல் விழா நடைபெறவில்லை. 1952- ம் ஆண்டிலிருந்து அவ்வப்போது இயங்கியும் இயங்காமலும் இருந்துவந்த பாண்டூப் தமிழ் மன்றம் சரியான நிர்வாகிகள் இல்லாமல் இயங்கதிருந்த அம்மன்றத்தின் பணிமனையை மன்றத்தின் நிர்வாகிகள் இரண்டொருவர் தங்கிருந்து வடகைகொடுத்து அதனை பயன்படுத்தி வந்தனர். மன்றத்தின் சார்பில் இந்த நடவடிக்கையும் இல்லாதிருந்ததினால் 1964 ம் ஆண்டின் இறுதியில் மீண்டும் பொங்கல் விழா நடத்த வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. 1961 - ம் ஆண்டு நடைபெற்ற பொங்கல் விழாவின்போது வருகை தந்த முத்தமிழ் காவலர் அவர்கள் பொங்கல் விழாவினையும் திருவள்ளுவர் விழாவினையும் மறக்காது நடத்த முயற்சியுங்கள் அதற்குனே ஒரு அமைப்பு இருந்தால் ஆண்டு தோறும் அந்நிகழ்ச்சிகளை நடத்த பயன்படும் ஒரு தனிக்குழு அமைத்து அதன் மூலம் நடத்தினால் இவ்வாண்டு நடத்திய குழு மறு ஆண்டு இல்லாது மறைத்து விடலாம் புதிய புதிய குழுவினை ஆண்டுதோறும் அமைக்க இயலாது.என கூறியது நினைவுக்கு வந்தது.
எனவே நண்பர்கள் சிலர் ஒன்று சேர்ந்து பம்பாய் திருவள்ளுவர் மன்றம் எனும் அமைப்பை நிறுவி அதன் சார்பில் பொங்கல் விழாவினை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி 1964 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 -ம் நாள் திரு.பீற்றர் இராசன் இல்லத்தில் ஒரு சிறிய கூட்டம் நடைபெற்றது. திரு.சி.பெ.இராமன். திரு.வி.தேவதாசன், திரு.அ.பால், திரு.கு.சி.பெலிக்ஸ், திரு.கீ.இராசகோபால் ஆகியோர் வருகைதந்திருந்தனர். கூட்டத்தில் பம்பாய் திருவள்ளுவர் மன்றம் எனும் பெயரில் ஒரு அமைப்பை தொடங்குவது எனவும் அதன் தொடக்கவிழா 1965 - சனவரி திங்கள் 17,18 ம் தேதிகளில் இரண்டுநாட்கள் பொங்கல் விழா மற்றும் திருவள்ளுவர் விழா எனும் பெயரில் நடத்துவது எனவும் மன்றத்தினை துவங்கி வைக்க முத்தமிழ் காவலர்.கீ.ஆ.பெ.விஸ்வநாதம் அல்லது நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோரில் ஒருவரை அழைப்பது எனவும், விழா மலர் ஒன்று வெளியிடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. அத்துடன் தற்காலிக செயற்குழு ஒன்று திரு.சி.வெ.இராமன் தலைவராகவும், திரு.கு.அ.பால் செயலாளராகவும் ,திரு.வி.தேவதாசன் பொருளாளராகவும் திரு.கே.இராசகோபால் திரு.கே.சி.பெளிக்ஸ், திரு.க.பாஷ்யம், திரு.எஸ்.ஜெகசிவன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் கொண்டு அமைக்கப்பட்டது. சனவரி திங்களில் நடைபெறவிருக்கும் மன்றத்தின் திறப்புவிழாவுக்கு முன்,உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் இயன்ற அளவு சாதாரண உறுப்பினர்களை சேர்ப்பது எனவும் உறுப்பினர்களிடமிருந்து ரூ.5/- ஆண்டு கட்டணமாகவும் ரூ.50/- ஆயுள் கட்டணமாகவும் பெறுவது எனவும் திறப்புவிழாவின் பொது உறுப்பினர்கள் அனைவரையும் கொண்ட பேரவைக்கூட்டம் நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
மன்றத்தின் தற்காலிக செயற்குழுவின் இரண்டாவது கூட்டம் 27-12-1964 ஞாயிறு மாலை 4:30 மணிக்கு பாண்டூப் நேஷனல் பள்ளியில் நடைபெற்றது. திரு.இரா.வரதராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திருவாளர்கள் சி.வெ.இராமன், கு.அ.பால், வி.தேவதாசன் கீ.இராசகோபால் கு.சி,பெளிக்ஸ்.எஸ்.ஜெகசிவன், கிறிஸ்டோபர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
1965 -ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 23 -ம் தேதி பாண்டுப் சந்தர் நகர் எனுமிடத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.இவ்விழாவில் தமிழ் மன்றம் ,பம்பாய் திருவள்ளுவர் மன்றமாக உருமாற்றம் பெற்றது. மறுநாள் 24-01-1965 அன்று காலையில் முத்தமிழ் காவலர் திரு.கி.ஆ.பெ.விஸ்வநாதன், அவர்களின் தலைமையில் திருவள்ளுவர்மன்றத்தின் முதல் செயற்குழுக் கூட்டம் நடைப்பெற்றது. அமைப்பின் பெயர் பம்பாய் திருவள்ளுவர் மன்றம் என இருப்பதாக முடிவு செய்யப்பட்டது. மன்றத்தின் வழிக்காட்டியாக முத்தமிழ் காவலர் திரு.கி.ஆ.பெ.விஸ்வநாதன் இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டதை அவர் ஒப்புகொண்டார்.செயற்குழு தலைவராக திரு.எஸ்.அமர்நாத் அவர்களையும் , துணைத்தலைவர்களாக திரு.கு.நடராஜன், திரு.வா.சப்தரிஷி, அவர்களையும் , துணைச் செயலாளராகவும் , திரு.தேவதாசன் ,திரு.சி.வி.இராமன் ஆகியோரையும் பொருளாளராக திரு.கா.பல்சியம்,அவர்களையும் தணிக்கையாளராக திரு.சி.லாரன்ஸ் அவர்களையும் செயற்குழு உறுப்பினர்களாக முறையே எஸ்.ஜெகசீவன் ,ஆர்.எ.ராஜன், இரா.வரதராஜன், கு.ஆ.பால், வி.எஸ்.ராஜன், வி.என்.மூர்த்தி, கே.ராஜகோபால், வ.கா.சாமிநாதன், கிறிஸ்டோபர், பா.க.முத்தையா, டி.எம்.மூர்த்தி, கூ.சி.பெலிக்ஸ், பா.தம்பையா, ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மன்றத்தின் சார்பில் திருக்குறள் வகுப்பு ஒன்றை நடத்துவது எனவும்,திருவள்ளுவர் இரண்டாயிரமாவது ஆண்டு விழாவினை 1969 ஆண்டு நடத்துவது எனவும், திருவள்ளுவர் மன்றத்தில் உறுப்பினராக விரும்புபவர்கள் நுழைவு கட்டணமாக ஐம்பது காசுகளும் ஆண்டு கட்டணமாக ஐந்து ரூபாயும் வசூலிப்பது என்று முடிவானது. மன்றதிற்கென தனி சட்டதிட்டங்களை எழுதி செயற்க்குழுக்கூட்டதில் நிறைவேற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. அடுத்த செயற்குழுக் கூட்டம் 14-2-1965 அன்று நடைப்பெற்றது. துணைத்தலைவர் கு.நடராஜன் தலைமை வகித்தார்.முக்கிய தீர்மானம் தமிழகத்தில் நடைபெற்ற மொழிப்போரில் உயிர் நீத்த தியாகிகளுக்கு பரிவை காட்டும் தன்மையில் உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.மன்றத்தின் தற்காலிக பணிமனையாக பாண்டுப் தமிழ்மன்றத்தின் அறையில் வைத்து நடத்துவது எனவும் திங்கள் தோறும் ரூபாய் பத்து கூடக்குலியாக கொடுப்பதுஎனவும் தீர்மானிக்கப்பட்டது. மன்றத்தின் சட்டதிட்டங்களை வரைவதற்கு வி.தேவதாசன், வா.சப்தரிஷி, வி.என்.மூர்த்தி, கு.நடராஜன், வி.சுந்தரம், ஆகியோர் அடங்கிய குழுவினரிடம் ஒப்படைப்பது என முடிவு செய்யப்பட்டது. மன்றத்தின் பொருளாதார வளர்சிக்காக ராஜராஜேஸ்வரி கலைமன்றத்தின் மாணவி குமாரி சுதா துரைசாமியின் நடனத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
27-03-65 அன்று திரு.ஜெகசீவன், அவர்களின் இல்லத்தில் வைத்து திருவள்ளுவர் மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. நடைபெறவிருக்கும் நடனநிகழ்ச்சிக்கு ரூபாய் பதினைந்து, ரூபாய் பத்து, ரூபாய்.ஐந்து, ரூபாய்.மூன்று, எனும் வரிசை படி நன்கொடைசீட்டு அச்சடிப்பது என முடிவு செய்யப்பட்டது. மே 9 அன்று மாதுங்கா போதார் கல்லூரி கலையரங்கில் நடைபெறவிருக்கும் நடனநிகழ்ச்சிக்கு மராத்திய மாநில ஆளுநர் தி.பி.வி.செரியன், அவர்களை அழைப்பது என தீர்மானிக்கப்பட்டது..
18-4-65 அன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் திரு.எ.எஸ்.பாஸ்கர் அவர்கள் தலைவராக தேர்வுசெயப்பட்டார். 16-5-65 ஞாயிறு மாலை 5 மணிக்கு மாதுங்கா போதார் கல்லூரியின் கலையரங்கத்தில் குமாரி சுதா துரைசாமியின் நடனநிகழ்ச்சி நடைபெற்றது. தலைவர். திரு.எ.எஸ்.பாஸ்கர் அவர்கள் வரவேற்ப்புரையாற்றினார் . ஆர்.வி.மூர்த்தி. சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். சுமார்.இரண்டரை மணிநேரம் இந்நிகழ்ச்சி நடைப்பெற்றது .
23-5-65 அன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நடைபெற்று முடிந்த குமாரி சுதா துரைசாமியின் நட்டியதிற்கான வரவு செலவு கணக்கு சர்பார்க்க பட்டது.
13-6-65 அன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் மன்றத்தின் சார்பாக குமாரி வைஜெயந்தி மாலா வின் நடனநிகழ்ச்சி அல்லது திரு.சிதம்பரம் ஜெயராமன் இசை நிகழ்ச்சி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
5 - 7 -65 அன்று இரண்டாவது கலைவிழா அன்றைய தலைவர்
S.O.ஜெகநாதன் அவர்களின் தலைமையில் காமராஜ் வித்யாலயா கலை அரங்கில் சேத்தூர் சமஸ்தான நாதஸ்வர வித்வான் நாதவேள் இசைமணி ,இராசப்பளையம் R.V.செல்லையாகுழுவினரின் கச்சேரி நடத்தியது பம்பாய் தமிழ் மன்றம்.
மூன்றாம் கலைவிழா மேற்கு இரயில்வே பொதுமேலாளர், திரு.ஒ.எஸ்.மூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் திருமதி.கமலா , குமாரி.வசந்தி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் .அதனை தொடர்ந்து மன்றத்தின் முதல் மன்ற மலரும் வெளியிடப்பட்டது.
20.06.66 அன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் பம்பாய் திருவள்ளுவர் மன்றத்தின் சார்பாக இனி இலக்கிய விழாவும் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டு அதன் ஏற்பாடுகளை உறுப்பினர்கள் செய்வது என தலைவர் திரு.நடராஜன் அவர்களால் பரிந்துரைக்க பட்டனர்.
12 வது செயற்குழு கூட்டம் 17-4-66 அன்று மாலை தலைவர் திரு.நடராஜன் அவர்களின் தலைமையில் கூடியது. இதில் வரும் மே திங்கள் 21,22 ஆகிய தினங்களில் இலக்கிய விழாவினை நடத்துவது என முடிவெடுக்க பட்டது.
முதலாவது ஆலோசனைக்கூட்டம் 24-4-66 அன்று நடைபெற்றது. இதில் திரு தேவதாசன் அவர்களின் தலைமையில் இயற்றபெற்ற மன்றத்தின் சட்டதிட்டங்கள் உறுப்பினர்கள் முன்னிலையில் அமல்படுத்தபட்டது.
13 வது செயற்குழு 02-06-66 அன்று நடைபெற்றது. இதில் செயற்குழுவில் மாற்றம் கொண்டுவர எண்ணி செயற்குழு மாற்றியமைக்கபட்டது. அன்று மன்றத்தின் முதல் தேர்தல் நடத்தப்பட்டு மன்றத்தின் தலைவராக திரு.எ.எஸ்.பாஸ்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். எஸ்.தியாகராஜன் துணை தலைவராகவும் , கு.நடராஜன் அவை தலைவராகவும் , சி.வே.இராமன்,வி.தேவதாசன் ஆகியோர் செயலாளர்களாகவும் எஸ்.ஜெகசிவன் பொருளாளராகவும் உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்க பட்டனர்.மன்றத்தின் சார்பில் திருக்குறள் வகுப்புகள் நடத்தும் பொறுப்பை மன்ற செயற்குழு உறுப்பினர் வா.சப்தகிரி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கலைவிழா மூன்று கண்ட தமிழ் மக்கள் கலையோடு இலக்கியத்தையும் அறிந்துக்கொள்ளும் வகையில் இலக்கிய மன்றம் 1966 ஆம் ஆண்டு ஜூன் மாதம்,ஐந்தாம் தேதி பாண்டுப் சந்திர நகர் திடலில் திருவள்ளுவர் விழா என்ற பெயரில் நடைபெற்றது. திரு.எ.எஸ்.பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சொற்பொழிவாளர்கள் திரு.பொற்கோ, திரு.பி.எஸ்.சேஷாத்திரி , திருக்குறளின் பல்வேறு அதிகாரங்களை பற்றி விளக்கி திருக்குறளை போதித்தனர்.திருவள்ளுவரின் பெருமையையும் மக்களுக்கு உணர்த்தினர்.
மன்றத்தின் 14 வது செயற்குழுக்கூட்டம் 18-6-66 அன்று நடைபெற்றது.இதில் 1967 ஆம் ஆண்டு மே திங்களில் திருவள்ளுவர் மன்றத்தின் சார்பாக தமிழக புலவர் கூட்டத்தினை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
15 வது 17-07-66 அன்று செயற்குழு கூட்டத்தில் மற்றுமொரு விழா நவம்பர் திங்களில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து மன்றத்தின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் 30-10-66 அன்று நடைபெற்று நவம்பர் மாத கலைவிழாவை முப்பெரும்விழாவாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
இதுவரை நாட்டியம் ,இலக்கியம் என தனித்தனியே கலைவிழா நடத்திய மன்றம், தமிழின் இயல், இசை, நாடகம் மூன்று கலைகளின் மூலம் மக்களிடையே நெருக்குவதற்கு 1966 ஆம் ஆண்டு நவம்பர் 18 தேதி முப்பெரும்விழா நடத்தியது. முதல்நாள் நவம்பர் 18 ம் தேதி மாதுங்கா போதார் கல்லூரி கலையரங்கில் கி.ஆ.பெ.விஸ்வநாதன் அவர்களின் தலைமையில் திரு.எஸ்.சண்முகானந்தா -வின் "சிலம்பின் சிறப்பு " மற்றும் பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரை அவர்களின் "பாரதி கண்ட வள்ளுவன் " என்ற தலைப்புகளில் சொற்பொழிவு நிகழ்த்தினர். அதன் மறுதினம் 19 தேதி மராட்டிய மாநில கவர்னர் திரு.பி.வி.செரியன். அவர்களின் தலைமையில் குமாரி மல்லிகா குழுவினரின் "சித்திரப்பாவை " நாட்டிய நாடகம் சண்முகானந்தா அரங்கிலும் , 20 தேதி டி.வி.இராமனுஜம் அவர்களின் தலைமையில் சீர்காழி.எஸ்.கோவிந்தராஜனின் இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது. இதன் மூலம் மும்பை மக்களிடையே திருவள்ளுவர் மன்றம் பெரிதாக பெயர் பெற்றது.
பம்பாய் திருவள்ளுவர் மன்றத்தின் அடுத்த செயற்குழுக்கூட்டம் 11-12-66 அன்று நடைபெற்றது இதில் தமிழகப் புலவர்களை மும்பைக்கு அழைத்து சிறப்பிப்பது என முடிவு செய்யப்பட்டு 1967 மே திங்கள் இருபதாம் நாள் துவங்க பட்டது.
முதல்முறையாக மாண்புமிகு தமிழகப் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.மூ.கருணாநிதி அவர்கள் கலந்துக்கொண்டார். இவ்விழா சண்முகானந்தா அரங்கில் மராட்டிய சாகித்ய சங்கத்தின் தலைவர் பேராசரியர்.என்.ஆர்.பாட்டக் அவர்களின் தமிழகப் புலவர் பெருமக்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். நாவலர்.நெடுஞ்செழியனின் சொற்பொழிவும் குமாரி ரேணுகாவின் பரதமும் நடைபெற்றது.
1968 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ம் தேதி மாதுங்கா பாரதிய சங்கீத சபா அரங்கில் தமிழக உள்ளாட்சிதுறை அமைச்சர் மாண்புமிகு மா.முத்துச்சாமி தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைப்பெற்ற இவ்விழாவில் மூன்றம் நாள் பரதத்துடன் நிறைவுப் பெற்றது.
இத்தனை விழாக்கள் நடத்திய திருவள்ளுவர் மன்றம் திருவள்ளுவருக்கென ஒரு விழா ஏற்பாடு செய்தது. திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டு விழா என்ற பெயரில் 1969 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ம் நாள் மாதுங்கா நட்பு பூங்காவில் அமைந்திருந்த அறிஞர் அண்ணா அரங்கில் தொடங்கியது.மராட்டிய மாநில ஆளுநர் மாண்புமிகு டாக்டர்.பி.வி.செரியன் அவர்கள் தொடங்கிவைக்க தமிழகச் சட்டமன்ற பேரவைத் தலைவர் புலவர் கோவிந்தன் விழாவுக்கு தலைமை தாங்கினார். விழாவில் மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவர் தமிழ்வேள் சர்.பி.பி.இராசன் அவர்களின் உரையும், நாதஸ்வர கச்சேரியும் நடைபெற்றது.
இரண்டாம் நாள் கி.ஆ.பெ.விஸ்வநாதன் அவர்களின் தலைமையில் புலவர் பெருமக்களின் திருவள்ளுவரின் திருக்குறள் கருத்தரங்கம் நடைபெற்றது.
மூன்றாம் நாள் கி.ஆ.பெ.விஸ்வநாதன் தலைமையில் திருக்குறள் பட்டிமன்றமும் அதைத்தொடர்ந்து ஆங்கில சொற்பொழிவு தமிழ்வேள் சர்.பி.பி.இராமன் பாரட்லா, அவர்களின் தலைமையிலும் நடைபெற்றது. இறுதியாக நான்காம் நாள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திருமதி.சத்தியவாணி முத்து அம்மையார் அவர்களின் தலைமையிலும் நடைபெற்று சிறப்பாக நிறைவு பெற்றது.